சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

100%.. ஒருத்தரும் தப்ப முடியாது.. போலீஸ் ஸ்டேஷன்களில் கேமராக்கள்.. கவுன்சிலிங் வேற.. டிஜிபி அதிரடி

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் குற்றங்கள் குறைந்து வருவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
பொதுநல வழக்கு ஒன்றில், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

அனைத்து போலீஸ் நிலையங்களின் நுழைவாயிலிலும், லாக்அப்-களிலும், காரிடார்களிலும், லாபி, ரிசப்ஷன், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகளிலும், லாக்அப்புக்கு வெளியேயும், போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழல் வெளிப்புறத்திலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.

பண்டிகை காலம்..தயார் நிலையில் இருங்கள்..காவல்துறையினருக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு பண்டிகை காலம்..தயார் நிலையில் இருங்கள்..காவல்துறையினருக்கு உத்தரவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு

வடமதுரை

வடமதுரை

மேலும், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த தேவையான, போதுமான நிதியை மாநில அரசுகள் உடனடியாக ஒதுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த சரவணன் பாலகுருசாமி என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி, சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜகணேஷ், தங்கபாண்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்..

டிஜிபி

டிஜிபி

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், 'வடமதுரை காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது... ஆனால், அரசு தரப்பிலோ, காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் 30 நாட்களுக்கு மேல் தானாக அழிந்துவிடும், என்று பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை 18 மாதங்கள் வரை பாதுகாக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... அதன்படி, தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பதிவுகளை குறைந்தபட்சம் ஒரு ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.. அதற்கு ஏற்றவாறு 3 மாதங்களில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை சேமிக்கும் வசதியை உள்துறை செயலரும், டிஜிபியும் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 100 சதவீதம்

100 சதவீதம்

ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தவுடனேயேஅனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தும்படி துரிதமாக நடந்த நிலையில், 100 சதவீதம் அந்த பணி முழுமையையும் பெற்றுவிட்டது.. இந்நிலையில், தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தஞ்சை வந்தார்... தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார். பிறகு தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு போலீஸ் நிலையம் அருகே கண்காணிப்பு கேமரா நவீன கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

 டிஜிபி சைலேந்திரபாபு

டிஜிபி சைலேந்திரபாபு

செய்தியாளர்களிடம் டிஜிபி சைலேந்திரபாபு சொல்லும்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் 100 சதவீதம் பொருத்தப்பட்டுள்ளன... இதன்மூலம் குற்றங்கள் நடப்பது குறைய தொடங்கிவிட்டன.. தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி மதிப்பில், 1,400 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான நவீன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குற்றங்களை குறைக்க முடியும். வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பியோடியவர்களின் வாகன எண்ணை தெளிவாக கண்டறியலாம்.

 போலீஸ் ஸ்டேஷன்

போலீஸ் ஸ்டேஷன்

மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, 822 மகளிர் போலீஸ் நிலையங்களில் தற்கொலை தடுப்பு தொடர்பான பயிற்சிகளை இன்ஸ்பெக்டர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குகிறார்கள்... மேலும் 1,480 போலீஸ் நிலையங்களில் ஒரு காவல் அதிகாரியை குழந்தைகள் நல அதிகாரியாக நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தற்கொலையை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
100% Survelliance cameras and DGP Sylendra babu says about Tanjore Smart City CCTV Cameras
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X