Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

101 என்கவுண்டர்கள்.. 129 கொலை.. என்கவுண்டர் நகரமாகும் சென்னை? சட்டத்தின் ஆட்சியா இது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவல்துறை நடத்தும் என்கவுண்டர்களுக்கு நீதி கேட்டு நீதிமன்றம் போனால், வழக்கை விசாரிக்கவே பல ஆண்டுகள் இழுத்தடிக்கிறார்கள் என்று மனித உரிமை செயல்பாட்டாளர் ஹென்றி திபேன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை என்கவுண்டர் நகரமாக மாறி இருக்கிறது. அருண் ஐபிஎஸ் பதவி ஏற்றபோது, 'ரவுடிகளுக்கு என்ன பாஷையில் சொன்னால் புரியுமோ அந்த பாஷையில் பேசி புரியவைப்போம்' என்று மறைமுகமாக ஒரு கருத்தை முன்வைத்தார். அப்போதே பொதுமக்களுக்கு அது என்ன பாஷை புரிந்துவிட்டது. அதற்காக அர்த்தத்தைக் கடந்த 4 வாரங்களில் காவல்துறை செயல்பாடு காட்டிக் கொடுத்துள்ளது.

henri tiphagne tamil nadu police

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை வளையத்திற்குள் இருக்கும்போதே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அப்படி என்றால் வழக்கில் யாருக்கு தண்டனை வழங்கப்படும்? உண்மை குற்றவாளிகள் யார்? ஏன் இந்தக் கொலை நடந்தது? என எந்த உண்மையும் வெளியே வருவதற்கு முன்னதாக என்கவுண்டர்கள் நடைபெற்று வருகின்றன. இது சட்டத்தின் ஆட்சிதானா? என்ற கேள்வியை மனித உரிமை ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்.

பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகன், தான் ஒரு வழக்கறிஞராக என்கவுண்டரை ஆதரிக்க முடியாது என்று பேசி இருக்கிறார். பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவே, 'ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 23 பேர் கைதாகி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இதே கதிதான். இதில் கருத்துச் சொல்ல ஒன்றுமே இல்லை' என வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இந்தப் படுகொலைகள் பற்றிப் பேசிய மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் வழக்கறிஞரான ஹென்றி திபேன் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார். அவர் பேசுகையில், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றிக் கடந்த 2021 தேர்தல் பரப்புரையில் திமுக என்ன வாக்குறுதி கொடுத்தது? கனிமொழி என்ன வாக்கு கொடுத்தார்? நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுத்த அறிக்கையை ஏற்று திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அதைச் செயல்படுத்தவே இல்லை? இதுதான் தண்டனை மறுப்பு என்று சொல்கிறோம். செயல்பட வேண்டிய அத்தனை அதிகார அமைப்புகளும் சரியாகச் செயல்படவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தண்டனை மறுப்பு?

henri tiphagne tamil nadu police

தமிழ்நாட்டில் 1998இல் இருந்து 101 என்கவுண்டர் நடந்துள்ளன. அதில் சுமார் 129 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவை அனைத்துமே மோதல் சாவுகள். ஆனால், ஆய்வு செய்து பார்த்தால் அப்படி ஒன்றுமே இருக்காது. இவை அனைத்தும் சட்டத்திற்கு எதிராக நடந்த கொலைகள்? 2010இல் வெள்ளத்துரை என்பவர் 2 பேரை என்கவுண்டர் செய்தார். அந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என நீதிமன்றம் சென்றோம். அந்த வழக்கு 2024இல் விசாரணைக்கு வருகிறது. வெள்ளத்துரை பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 2 நாட்கள் முன்னதாக பதவிநீக்கம் செய்ய உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், அதை அரசு ரத்து செய்கிறது. இதன் மூலம் அரசு சொல்வது என்ன?

ரவுடியிஸம் வளர்கிறது ஆகவே என்கவுண்டர் செய்கிறோம் என்கிறார்கள். காக்கிச் சட்டை போட ரவுடிகள் செய்யும் கொலைக்கு யார் நீதி வாங்கி தருவது? ஆம்ஸ்ட்ராங் கொலை அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. உடனே அரசு என்ன செய்தது? டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றியது. சங்கர் ஜிவாலை உங்களால் தூக்க முடியுமா? ஏனென்றால் 2 ஆண்டுகள் அவர் அந்தப் பதவியில் இருக்கவேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆபரேஷன் பதவியில் உள்ளவர்களை 2 ஆண்டுகள் வரை பதவி மாற்றம் செய்ய முடியாது என்பது தீர்ப்பு. அப்படி எனில் ரத்தோரை எப்படி மாற்றினார்கள்?

இதைப் பற்றி முதல்வர் ஏதேனும் விளக்கம் அளித்திருக்கிறாரா? எதிர்க்கட்சிகள் இதைப் பற்றி ஏதேனும் கேள்வி எழுப்பியதா? ரத்தோரை மாற்றிவிட்டு அருணை கொண்டுவந்தார்கள். அவர் வந்த பிறகு சில அதிகாரிகள் மாற்றப்பட்டன. அதன்பிறகு திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். நாங்கள் திருவேங்கடம் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கிறோம். நீதிமன்றம் போலீஸ் காவல் வழங்கிய நபரை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? அந்தக் காவல்துறையே அவரை என்கவுண்டர் செய்துள்ளது.

சீசிங் ராஜாவை ஆம்ஸ்ட்ராங் வழக்கில்தான் கைது செய்தோம் என்று சொன்னார்கள். இப்போது இது வேறு வழக்கு என்கிறார்கள். ஒரே வழக்கில் இரண்டு என்கவுண்டர் என்றவுடன் இப்போது இல்லை என மறுக்கிறார்கள். இது பொய் என நான் வேறு தனியாகச் சொல்லவேண்டுமா? எல்லா என்கவுண்டருக்கும் எதிராக மனித உரிமை அமைப்பு மட்டுமே போராட முடியாது? நீதிபதிகளும் இதைப் பற்றிப் பேச முன்வரவேண்டும். பல நீதிபதிகள் மனசாட்சி உறுத்தியதால் இரவு தூக்கம் வரவில்லை எனத் தீர்ப்பில் எழுதி இருக்கிறார்கள்.

அதேபோல மாநில மனித உரிமை ஆணையம் ஒன்று உள்ளது. கடந்த 10 வாரங்களில் 3 என்கவுண்டர் நடந்துள்ளன. இதைத் தானே முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுக்கவேண்டும். இலவச சட்ட ஆலோசக சட்டக் குழு உள்ளது. அது வழக்குத் தொடர வேண்டும்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+