தமிழகத்தில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி...இன்று மாலை அறிவிப்பு - அன்பில் மகேஷ்
தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான தேதி எப்போது என்று இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளது
சென்னை: எஸ்எஸ்எல்சி, மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது என்பது பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்வுக்கான கால அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும், மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது மொபைல் மூலமாக ஆன்லைனில் பாடங்களை கற்று வந்தனர்.
கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கின. பத்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வும் நடைபெற்றது.
இந்த நிலையில் மே மாதம் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று உறுதியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்வு எப்போது நடைபெறும் என்றும் அதற்கான கால அட்டவணை மாலையில் வெளியாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications