Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! தமிழை விட ஆங்கிலத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்! இதை நோட் பண்ணீங்களா

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், இதில் தமிழ் உட்பட மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் தான் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் + 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியானது.

10th results Pass percentage is More in English than in any other subjects

இந்தாண்டு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், அதை 4,47,203 மாணவர்கள் 4,47,061 மாணவிகள் என மொத்தம் 8,94,264 பேர் எழுதி இருந்தனர்.

தேர்வு முடிவுகள்: இதற்கிடையே இப்போது 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் 91.55%, அதாவது 8,18,743 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களில் 3,96,152 பேரும் மாணவிகளில் 4,22,591 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.58% ஆக இருக்கிறது. அதேநேரம் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதம் கூடுதலாக 94.53%ஆக உள்ளது.

கடந்தாண்டு நடந்த பொதுத் தேர்வில் 9.14 லட்சம் பேர் தேர்வு எழுதி 8.35 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். அந்த ஆண்டில் தேர்ச்சி சதவிகிதம் 91.39%ஆக இருந்தது. இந்தாண்டு அதை விடத் தேர்ச்சி சதவிகிதம் சற்று உயர்ந்துள்ளது.

பள்ளிகள் வாரியாக: மொத்தம் 12,625 பள்ளிகளில் இருந்து மாணவ- மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், அவற்றில் 4105 பள்ளிகளில் 100 சதவிகித தேர்ச்சி இருந்துள்ளது. அதில் 1364 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிகள் வாரியாக பார்க்கும் போது அரசுப் பள்ளிகளில் படித்தோர் 87.90% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.77%ஆக உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 97.43%ஆக இருக்கிறது.

ஆங்கிலத்தில் தான் அதிகம்: இதில் பாடம் வாரியாக தேர்ச்சி சதவிகிதம் தான் பலரையும் கவனிக்க வைக்கிறது. பொதுவாக ஆங்கில படம் பலருக்கும் கடினமாக இருக்கும். ஆனால், இந்த முறை மற்ற அனைத்து பாடங்களைக் காட்டிலும் ஆங்கிலத்தில் தான் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாகத் தமிழ் மற்றும் மொழிப் பாடங்களைக் காட்டிலும் கூட ஆங்கிலத்தில் தான் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

இந்தாண்டு தேர்வு எழுதியவர்களில் 99.15% பேர் ஆங்கிலத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களில் 96.85% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல கணிதத்தில் 96.78% பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், அறிவியல் பாடத்தில் 96.72% பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 95.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல 100க்கு 100 மார்கும் ஆங்கிலத்தில் மொத்தம் 415 போர் பெற்றுள்ளனர். இது தமிழ் மற்றும் மொழிப் பாடத்தைக் காட்டிலும் அதிகம். தமிழ் மற்றும் மொழிப் பாடத்தில் 8 பேர் மட்டுமே 100க்கு 100 மார்க் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+