Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் எஸ்.பிக்கள் உட்பட 11 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் 19 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

11 police officers transferred by tn government


1. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. திருவள்ளூர் எஸ்.பி பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்படுகிறார்.

3. சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலில் இருந்த சீனிவாசபெருமாள் திருவள்ளூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. திருப்பூர் நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமிக்கப்படுகிறார்.

5. மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்படுகிறார்.

6. திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்படுகிறார்.

7. சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமிக்கப்படுகிறார்.

9. மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்படுகிறார்.

10. சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்.

11. சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 police officers transferred by tn government
11 police officers transferred by tn government
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+