Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

118 ஏக்கரில் 4 குளங்கள் ரெடி; 10 லட்சம் லிட்டர் நீர் சேமிப்பு! சென்னை இனி மூழ்காது மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னையை மீட்டு எடுப்பதற்காகக் கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் வெட்டப்பட்டு வரும் 4 குளங்கள் இன்னும் 10 நாட்களில் முழுமையாக முடிக்கப்பட உள்ளன என்பது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் வரும்போது வேளச்சேரி, அடையாறு மற்றும் பள்ளிக்கரணை சுற்றுவட்டாரங்களில் குடியிருக்கும் மக்கள் இரவு தூக்கம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்போது வெள்ளம் வருமோ? இந்த வருடம் எத்தனை வீடுகள் மூழ்குமோ? எவ்வளவு லட்சம் இழப்பு ஏற்படுமோ என்று பீதியில் சிக்கித் தவித்து வருகின்றார்கள். கடந்த வாரம் வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட் மக்களை அதிக அளவுக்குப் பீதிக்கு உள்ளாக்கிவிட்டது.

chennai flood chennai rain

இதற்கு எல்லாம் என்னதான் தீர்வு? எப்போதுதான் விடிவுகாலம் பிறக்கும் என புலம்பிக்கொண்டிருந்த சென்னை மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆம்! கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மழை வெள்ளநீரைத் தடுப்பதற்காக 4 மிகப் பிரம்மாண்ட குளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் இன்னும் 10 நாட்களில் முடிக்கப்பட்ட உள்ளன. 24 7 மணிநேரமும் இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் வேலைகள் குறித்து லைவ் அப்டேட் கிடைத்துள்ளது.

இந்தக் குளங்கள் வெட்டும் பணிகள் குறித்து அடையாறு நகராட்சி மன்றத் தலைவர் துரைராஜ் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அங்கே நடைபெற்று வரும் வேலைகள் பற்றி பல அப்டேட் கொடுத்துள்ளார். துரைராஜ் பேசுகையில், “மொத்தமாக இந்தக் கிண்டி ரேஸ் கோர்ஸ் மட்டும் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

அதில் குதிரைப் பந்தயம் நடைபெறும் மைதானம் மட்டும் 118 ஏக்கர் வரை இருக்கிறது. மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளநீரானது இந்தப் பக்கமாகப் புகுந்துதான் வேளச்சேரி, மடுவங்கரை பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்குச் சென்று கொண்டிருந்தது. ஆனால், வேளச்சேரி. மடுவங்கரை பகுதிகள் அனைத்து குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. கிண்டி ரேஸ் கோர்ஸ் உள்ளே சில நீர்த்தேக்க பகுதிகள் இருந்தன.

அதை அனைத்தையும் மூடி காலப்போக்கில் சமன் செய்துவிட்டார்கள். இந்த மைதானம் முழுக்க மேடாகிவிட்டது. இதில் பெய்கின்ற மழைநீர் வெளியேறும் அளவுக்குக் கால்வாய்கள் பெரிதாக இல்லை. மேலும் ஒரே நேரத்தில் பல ஆயிரம் லிட்டர் நீர் பெருக்கெடுத்து வெளியேறுவதால், உடைப்பு ஏற்பட்டு அந்த நீரானது வேளச்சேரி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகிறது. ஆகவே இந்த 118 ஏக்கர் நிலத்தில் தேங்கும் மழைநீரைச் சேமிப்பதற்கு இங்கேயே ஏரி வெட்டும் முடிவை எடுத்தோம்.

அதை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். நீர் மேலாண்மை வாரியம் சார்பாக இந்த குதிரைப் பந்தயம் நடத்தும் நிறுவனத்திற்கு நோட்டீஸ் விடுத்தோம். அவர்கள் எந்தவித பணிகளையும் செய்ய முன்வரவில்லை. முதல்வரின் உத்தரவின் பெயரில் இப்போது அரசு நிதியில் குளங்களை வெட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் குளங்கள் 9 கோடியே 80 லட்சம் லிட்டர் மழைநீரைச் சேமிக்கும் அளவுக்கு வெட்டப்பட்டு வருகின்றன. அதற்காக புதியதாக 4 குளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பே ரேஸ் கோர்ஸ் உள்ளே ஒரு குளம் சிறிய அளவிலிருந்தது. அதை ஆழப்படுத்துவதுடன் அகலப்படுத்தும் வேலையும் நடந்து வருகிறது. இங்கே சேமிக்கப்பட உள்ள மழைநீரை ஒவ்வொரு குளத்துடன் இணைக்க இருக்கிறோம்.

இதற்கு முன்பாக இங்கே தேங்கக் கூடிய மழை வெள்ளத்தை ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் உடனடியாக வெளியேறும்படி கால்வாய் அமைத்திருந்தனர். மழைநீரை வேகமாக வெளியேற்றுவதனால்தான் கிண்டி மற்றும் வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு வந்தது. இந்த நீர் குளங்களில் இங்கேயே சேமிக்கப்பட்டால் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பிக்கும்.

இங்கே உள்ள குளங்களிலிருந்து நீர் வெளியேற மதகுகளை அமைக்க இருக்கிறோம். அதில் கதவுகளைப் போட்டு வெள்ளம் வெறியேற்றாத அளவுக்கு நீரை தடுக்க இருக்கிறோம். மழையின் வேகம் குறைந்த பிறகு இங்குள்ள நீர் படிப்படியாக வெளியேற்றப்படும். ஆகவே, கிண்டி, வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும். மேலும் தண்ணீரை உறிஞ்சி எடுக்க மோட்டார்கள் வைக்க இருக்கிறோம். இங்கே இருந்து வெளியேறும் நீர் சுமார் 19கிமீட்டர் தூரம் பயணித்து முட்டுக்கட்டை சென்று அடைகிறது.

100 அடி நீளம், 300 அடி அகலம், 22 அடி ஆழத்தில் ஒவ்வொரு குளமும் அமைக்கப்படுகிறது. 22 அடிக்குக் கீழ் குழி தோண்டமுடியவில்லை. பாறைகள் வருகின்றன. ஆகவே ஆழத்தை அதிகப்படுத்தும் திட்டம் இல்லை. குளத்தின் மட்டத்திலிருந்து 6 அடிக்கு மேல் கரையைக் கட்டமைக்கிறோம். இந்த வேலைகள் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. மழைக்காலம் தொடங்கிவிட்டது. எனவே அதை மனதில் வைத்து 26 ஹிட்டாச்சி பொக்லைன் எந்திரங்கள் வேலை செய்து வருகின்றன. குழியைத் தோண்டும்போதே கரை அமைத்து வருகிறோம். அதனால் வேலைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

முதல்வர் இந்தப் பணிகளை ஒரே வாரத்தில் முடிக்க உத்தரவு போட்டுள்ளார். அதற்குள் முடிக்க வேண்டும். குறைந்தது 10 நாட்களாவது ஆகும் என்று திட்டமிட்டு உள்ளோம். இடையில் மழை வந்துவிட்டது. அதனால் கொஞ்சம் தாமதமானது. இங்கே மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. எனவே வேலைகள் தடைப்படாமல் பார்த்துக் கொள்கிறோம். இரவில் வேலை செய்வதற்கு ஜெனரேட்டர் வசதியும் உள்ளது.

எனவே 10 நாட்களில் உறுதியாக முடிக்கப்படும். இந்தப் பணிகள் முடிந்த பிறகு அடுத்த கட்டமாக இந்தக் குளங்கள் நிறைந்த பிறகு அடையாற்றுக்கு நேரடியாகக் கொண்டு செல்வதற்கான ஒரு திட்டத்தையும் வகுத்துள்ளோம். அதன் மூலம் ஒன்றரை கிமீட்டர் தூரத்தில் உடனடியாக நீரை வெளியேற்ற முடியும்” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+