ரெடியா! இடி மின்னலுடன் பொளக்க போகுது கனமழை.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 13 மாவட்டங்களில் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில காலமாகவே தமிழ்நாட்டில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை காரணமாக மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்கிறது.

 13 districts of Tamilnadu will get heavy rain for next 3 hours says Chennai Meteorological department

அதிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழையே பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும், மழை பெய்வதால் சாலைகளில் நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கு அது சிரமமாகவே மாறியுள்ளது.

13 மாவட்டங்களில் மழை: இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மொத்தம் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்ல அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.

அதாவது திருவள்ளூர், ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல், நெல்லை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல திருப்பத்தூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வானிலை மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் செய்திக்குறிப்பில் வெளியிட்டிருந்தது. அதில் இன்று செப். 28ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 13 districts of Tamilnadu will get heavy rain for next 3 hours says Chennai Meteorological department

அதேபோல நாளை செப். 29ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வரும் செப். 30 முதல் அக். 4 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+