Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்! அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் எம்.டி ஜான் லூயிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

இளைஞர் நலன், விளையாட்டு வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வீடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக அபூர்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

16 IAS officers transfered in Tamilnadu and Apoorva becomes Principal Secretary of Housing, Urban Development

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குரலா பேரூராட்சிகள் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்க்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஷ்குமார் மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு, சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் டி.ஆபிரகாம், சமூக சீர்திருத்த துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இ.சரவணவேல் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர் ஊரமைப்பு இயக்கக திட்ட இயக்குனராக வி.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தொழில்துறை சிறப்பு மேலாளர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பேரூராட்சிகள் இயக்குனராக இருந்து வரும் டாக்டர் ஆர்.செல்வராஜ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையாளராக ஆர்.நந்தகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சாகோசெர்வ் மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி எம்.என்.பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார நல இயக்குனராக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+