சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்.. ஆட்டோ டிரைவர் கைது
சென்னை: சென்னை ஆவடி அருகே 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
திருவள்ளூர் மாவடடம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் தம்பதியர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு 16 வயதில் லட்சுமி என்ற மகள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்ளார்.

ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் லட்சுமி 11ம் வகுப்பு படித்து வருகிறார். லட்சுமியின் அப்பா மற்றும் அம்மா இருவருமே வேலைக்கு சென்றுவிடுவார்கள். இப்போது கொரோனா காலம் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சுமி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.
கடந்த 4ந்தேதி லட்சுமியின் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்கள். அப்போது, வீட்டில் மாணவி லட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். மாணவி தனியாக இருப்பதை கொள்ளுமேடு, செங்குன்றம் சாலையில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (45) என்பவர் அறிந்துள்ளார். அன்றைக்கு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.. பின்னர், அவர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
தனக்கு நடந்த அவலத்தை வெளியில் சொல்ல பயந்து கிடந்த மாணவி லட்சுமி பெற்றோரிடம் சமீபத்தில் தான் கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சீனிவாசன் மீது ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்து தலைமறைவாக இருந்த சீனிவாசனை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications