தொடர்ந்து சரியும் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள்: தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு பாதிப்பு: 23 பேர் பலி
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் வேகமாக சரிந்து வருகிறது. கொரோனா கேஸ்கள் சரிந்து வரும் நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு முக்கியமான தளர்வுகளுடன் செப்டம்பர் 6ம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
சினிமா தியேட்களுக்கு அனுமதி 50 சதவிகித மக்களோடு அனுமதி தரப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் கல்லூரிகள் திறக்கவும் அனுமதி தரப்பட்டு இருக்கிறது. செப்டம்பர் 1 முதல் ஆந்திரா, கர்நாடகா வெளிமாநில பேருந்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று கேஸ்கள்
இந்த நிலையில்தான் இன்றும் தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் குறைவாக பதிவானது. தமிழ்நாட்டில் இன்று 1630 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 23 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 34,709 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 1,827 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தொடர்ந்து டிஸ்சார்ஜ் எண்ணிக்கை புதிய கேஸ்களை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 25,47,005 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 19,171 ஆக குறைந்து உள்ளது.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 26,00,885 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,55,607 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,54,998 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 4,00,19,058 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 177 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 2129 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 198 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2229 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 146 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 1728 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications