சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்போதாவது ஸ்டாலின் அதிரடி காட்டுவாரா? நல்ல வாய்ப்பை நழுவ விடுவாரா?

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    உயர்நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து ஸ்டாலின் முன்னிற்கும் வாய்ப்பு- வீடியோ

    சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முக்கிய நடவடிக்கை எதாவது எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். சபாநாயகரின் தீர்ப்பு சரிதான் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    பெரிது இல்லை

    பெரிது இல்லை

    ஹைகோர்ட் தீர்ப்பில் 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். தமிழக சட்டசபையின் பலம் 214ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 108 பேர் தேவை. அதிமுகவிற்கு 109 பேர் பலம் இருக்கிறது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    இந்த நிலையில்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது அதிமுகவிற்கு எதிராக கூட செல்ல வாய்ய்ப்புள்ளது என்கிறார்கள். அதிமுகவில் உள்ள, அதிமுக எதிர்ப்பு எம்எல்ஏக்கள், ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி அளிக்கும்பட்சத்தில் ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது.

    கொண்டு வரவேண்டும்

    கொண்டு வரவேண்டும்

    இதற்கு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும். ஸ்டாலின் தலைமையில் மட்டுமே இது சாத்தியமாகும். அதிமுகவிற்கு எதிரான நபர்களை எல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும். முக்கியமாக அதிமுகவிலேயே இருக்கும் அதிமுக எதிர்ப்பு எம்எல்ஏக்கள் குறைந்த பட்சம் 4 பேரையாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களிக்க வைக்க வேண்டும்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் அப்படி எதுவும் செய்வார் என்று தெரியவில்லை. இப்போதே 20 தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். 20 இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு உள்ளது என்றுள்ளார். இதனால் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க மட்டுமே முயல்வார் என்றும் அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

    English summary
    18 MLA disqualification case verdict: Will Stalin utilise the chance of floor test in TN assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X