விமானப்படையில் வேலை.. பிளஸ் டூ தகுதி தான்.. சென்னையிலேயே பணிக்கு வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 182 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் சி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்குதான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Indian Air Force job jobs

பணியிடங்கள் விவரம்: லோயர் டிவிஷன் கிளர்க் (எல்.டி.சி) , இந்தி டைப்பிஸ்ட், சிவிலியன் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் டிரைவர் ஆகிய பணிகளில் மொத்தம் 182 பேரை தேர்வு செய்ய விண்ணப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: லோயர் டிவிஷன் கிளர்க் மற்றும் இந்தி டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகளை அடிக்கும் திறன் அவசியம். அதேபோல, நிமிடத்திற்கு 30 இந்தி வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறன் அவசியம். எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற பிறகு திறன் தேர்வு நடைபெறும்.

டிரைவர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் எல்.எம்.வி மற்றும் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் அவசியம். மோட்டார் மெக்கானிசம் பற்றிய அடிப்படை அறிவு அவசியம். வாகனம் ஓட்டுவதில் இரண்டு ஆண்டு அனுபவம் வைத்திருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு: மேற்கண்ட மூன்று பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 25 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

பணியில் அமர்த்தப்படும் இடங்கள்: சென்னை, கோயம்புத்தூர், புது டெல்லி, ஸ்ரீநகர், அம்பாலா, ஜலந்தர், பதான்கோட், சர்சாவா, ஸ்ரீகங்காநகர், சிர்சா, சம்பா, பஞ்ச்குலா, ஃபரிதாபாத், பெங்களூர், செகந்திராபாத், நாக்பூர், கான்பூர், சண்டிகர், டன்கிர்க் லைன், நாசிக், கவுகாத்தி, காந்திநகர், அலகாபாத், ஆம்லா, ஆக்ரா, லக்னோ, பிரயாக்ராஜ், பாரக்பூர், தேஜ்பூர், சாபுவா, ஹசிமாரா, பாக்டோக்ரா, கும்பீர்கிராம், மோகன்பாரி, மோகன்பாரி, திகாரு, சலுவா, சிங்கார்சி, ஷில்லாங் உள்ளிட்ட இடங்களில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்

சம்பளம் எவ்வளவு?: 7-வது ஊதிய கமிஷன்(CPC) லெவல் 2 படி சம்பளம் வழங்கப்படும். அதாவது, 19,900 - 63,200 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே தேர்வு மையங்கள் குறித்த ஆப்ஷன்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.08.2024 முதல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 01.09.2024- கடைசி நாளாகும். தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை நன்கு ஒருமுறை படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் https://tamilanguide.in/wp-content/uploads/2024/08/Indian-Air-Force-Official-Group-C-Notification-PDF.pdf செய்யவும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க: https://indianairforce.nic.in/ இந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+