குக் வித் கோமாளி நடிகர் பெயரில் பெண்ணிடம் மோசடி! புகைப்படத்தை மார்பிங் செய்வதாக மிரட்டிய இருவர் கைது
குக் வித் கோமாளி தர்ஷன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்த இருவர் கைது
சென்னை: குக் வித் கோமாளி நடிகர் தர்ஷன் பெயரை பயன்படுத்தி பெண்ணிடம் மிரட்டல் விடுத்து பணம் பறித்ததாக இருவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் புதுமுகங்கள், மாடல்கள், பழைய நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரை அழைப்பது வழக்கம். அந்த வகையில் ரஜினி முருகன் படத்தில் நடித்த தர்ஷன் குக் வித் கோமாளி சீசன் 3 இல் வந்திருந்தார்.
இவர் ஊட்டியை சேர்ந்தவர். அது போல் கனா எனும் படத்தில் நடித்திருந்தார். தும்பாவிலும் நடித்துள்ளார். இந்த ஆண்டு வெளியானு துணிவு படத்தில் நடித்திருக்கிறார். இவர் குறும்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி
குக் விக் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் நல்ல புதிய உணவுகளை சமைத்து நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமோதரன் ஆகியோரிடம் பாராட்டுகளை பெற்றார். இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் இந்த குக் வித் கோமாளி மூலம்தான் அவர் மக்களிடம் பிரபலமடைந்தார். அவரும் புகழும் சேர்ந்து செய்யும் காமெடி மக்கள் மனதில் நிலைத்தது.

கோமாளி
அது போல் அவருடன் நிகழ்ச்சியில் கோமாளியாக ஜோடி சேர சுனிதா கோகாய் செய்யும் சுட்டித் தனமும் மக்களால் விரும்பப்பட்டன. இந்த நிலையில் அண்மையில் தர்ஷன் பெயரில் இன்ஸ்டா கணக்கை மர்மநபர்கள் உருவாக்கி, அதில் அவரை போலவே மெயின்டெய்ன் செய்தனர். இந்த கணக்கில் பெண் ஒருவர் அடிக்கடி ஏதாவது மெசேஜ் அனுப்புவார்.

தர்ஷன்
இதை கவனித்த மர்மநபர்கள், அவருக்கு தர்ஷன் ரிப்ளை செய்வது போலவே செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணிடம் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் கேட்டிருந்தனர். உடனே அவரும் தர்ஷன் கேட்பதாக நினைத்து அனுப்பியதாக தெரிகிறது. பின்னர் போன் நம்பரும் தந்ததாக தெரிகிறது. உடனே அந்த எண்ணுக்கு மர்மநபர்கள் போன் செய்தனர்.

போன்
இதனால் அந்த பெண் தர்ஷன்தான் போன் செய்கிறார் என நினைத்து மகிழ்ச்சியாக எடுத்துள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய நபர்கள் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து ஆபாச தளங்களில் வெளியிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. அப்போதுதான் அந்த பெண்ணுக்கு நம்முடன் சாட் செய்தது தர்ஷன் இல்லை. யாரோ மர்மநபர்கள் என தெரியவந்தது.

2 லட்சம்
இதையடுத்து அந்த பெண்ணுக்கு அவ்வப்போது போன் செய்து மிரட்டியதால் ரூ 2 லட்சம் கொடுத்துள்ளார். இத்துடன் தன்னிடம் பணம் கேட்க கூடாது என கூறியுள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த நபர்கள் போன் செய்து பணம் கேட்டனர். இதனால் அந்த பெண் வேறு வழியில்லாமல் காவல் துறையில் புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், அலாவுதீன், வாகித் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவாகியுள்ளது. சினிமா நடிகர் என்றால் முகம் தெரியாவிட்டாலும் போட்டோ, வீடியோவை அனுப்பிவிடுவீர்களா என போலீஸார் அந்த பெண்ணையும் கண்டித்தனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications