டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிராக தனித் தீர்மானம்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
சென்னை: பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு இடையில் தமிழக சட்டப்பேரவையின் 2 நாட்கள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தீர்மானத்திற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் இதற்கு மத்தியில் இன்று சட்டப்பேரவை கூடியுள்ளது. ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் பேரவை 10 நாட்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 2 நாட்கள் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய கூட்டத்தொடரில், முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர், கேள்வி நேரம் தொடங்கியது.
எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதையடுத்து அரசின் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் அமைச்சர் துரைமுருகனால் முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். பாஜக சட்டப்பேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “சுரங்கம் தொடர்பாக மத்திய அமைச்சரிடமும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்” என்று கூறியிருந்தார். இதற்கு குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், “தீர்மானத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா?” என்று கேள்வி எழுப்பினார். ஆனாலும் நயினார் நாகேந்திரன் முன்பு பேசியதையே கூறி தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார்.
பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உறுதியோடு இருந்திருந்தால் இன்று மதுரையில் சுரங்கம் வந்திருக்காது என்று விமர்சித்திருந்தார். தொடர் விமர்சனங்களுக்கு முதல்வர் பதில் அளித்த நிலையில், “நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கம் வராது” என்று முதல்வர் உறுதியாக கூறினார். இதனையடுத்து அதிமுக இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்படியாக சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து நாளை கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்கும். கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிப்பார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
"மொத்தம் 1.4 கோடி பேர்".. தமிழகத்தில் தெலுங்கு பேசும் வாக்காளர்கள் எத்தனை பேர்? முழு டேட்டா -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
ஏப்ரல் 18 வரை தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications