தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தலைமை செயலாளரிடம் இருந்து பறந்த உத்தரவு
சென்னை: தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். தலைமை செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொள்வார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்பட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர்.

அதாவது, உயர்கல்வித் துறை செயலாளராக கார்த்திக், மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் (கூடுதல் பொறுப்பு)நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அதேபோல், உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரீஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டு இருந்தார்.
நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக அண்ணாதுரையும், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக இருந்த பிரபாகர் தாஸ், சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டனர். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குநராக (நிதி) விஷு மகாஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வளம் துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் ஷர்மாவும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த பணியிட மாற்றங்கள் செய்து ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், இன்று இரு துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யபப்ட்டுள்ளனர். இது தொடர்பாக தலைமை செயலாளர் பிறப்பித்த உத்தரவில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஊரக வளர்ச்சி துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் வருவாய் துறை இணை ஆணையர் சிவராசு நகராட்சி நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications