சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சல்லி சல்லியா போச்சே.. திமுகவில் தாவும் புள்ளி?.. ஓவர் ஸ்பீடில் பாஜக.. விழிக்கும் அதிமுக.. என்னவாம்?

சிவகங்கை பாஜகவில் இருந்து முக்கிய புள்ளி திமுக பக்கம் தாவலாம் என்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவில் இருந்து திமுக பக்கம் சிலர் வரப்போகிறார்களாம்.. திமுகவில் இருந்து பாஜக பக்கம் சிலர் வரப்போகிறார்களாம்.. அதிமுகவில் இருந்து சிலர் பாஜக, திமுக பக்கம் வரப்போகிறார்கள்.. இப்படி ஒரு யூகமான தகவல்கள் கிளம்பி உள்ளன.

விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளநிலையில், அதற்கான ஆபரேஷனையும் பாஜக கையில் எடுத்துவிட்டது.. ஒருபக்கம் திமுகவை டேமேஜ் செய்து கொண்டே மறுபக்கம், திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை மும்முரப்படுத்தி உள்ளது பாஜக.

ஆனால், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணன், மற்றும் திருச்சி சிவா மகன் போன்ற ஒருசிலர் மட்டுமே பாஜக பக்கம் தாவிய நிலையில், பெரிய அளவிலான புள்ளிகள் யாரும் செல்லவில்லை என்றே தெரிகிறது..

தமிழக மக்களே ஹாப்பி நியுஸ்! இன்னும் 4 நாளுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை! சென்னையில் எப்படி? தமிழக மக்களே ஹாப்பி நியுஸ்! இன்னும் 4 நாளுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை! சென்னையில் எப்படி?

 கிளீன் போல்டு

கிளீன் போல்டு

இந்த சூழலில்தான், ஒற்றை தலைமை விவகாரத்தில் சிக்கி கொண்டிருக்கும் அதிமுக நிர்வாகிகள் மீதும் வலையை வீச துவங்கி உள்ளதாம் பாஜக.. அதாவது, திமுக + அதிமுகவின் அதிருதியாளர்களுக்கு குறி வைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் ஒரு தகவல் கசிந்தது.. திமுக எம்எல்ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளாராம்.. அவர் கரூரை சேர்ந்தவராம்.. இவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்யும் பட்சட்தில், அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது..

 ஹாட் நியூஸ்

ஹாட் நியூஸ்

முன்னதாக, சிவகங்கை மாவட்டத்தில் பாஜகவுக்கு சென்ற நிர்வாகிகளை தங்கள் பக்கம் கொண்டுவர, திமுக தரப்பு களமிறங்கி உள்ளநிலையில், திமுகவுக்கு செக் வைக்க, கரூரை குறி பார்த்துள்ளதாம் பாஜக. இப்போது இன்னொரு தகவல் வட்டமடிக்கிறது.. திமுகவில், முதல்வரின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் செல்வாக்கு பெற்ற முக்கிய அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி.. திமுகவில் இருக்கும் ஒருசிலருக்கே, செந்தில்பாலாஜியின் வளர்ச்சி கடுப்பேற்றி வரும் நிலையில், பாஜக அதற்கு மேல் கொதிப்பில் உள்ளதாம்..

சான்ஸ்

சான்ஸ்

அதனால்தான், செந்தில்பாலாஜியின் வளர்ச்சியை தடுக்க மற்றொரு பிளானை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்கு காரணம், பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தானாம்.. இவர். அன்று அதிமுகவில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர்.. ஜெயலலிதாவின் ஆதரவை பெற்றவர்.. பிறகு, இவர் பாஜகவில் இணைந்தார்.. செந்தில் பாலாஜியை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பாஜகவில் அவருக்கு மாவட்ட தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.. ஆனால், இந்த ஒன்றரை வருட காலமாகவே அதற்கு எந்தவிதமான சான்ஸ்ஸும் இல்லாத நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தற்போது சூடுபிடித்துள்ளதால், இதையே சாதமான விஷயமாக பாஜக எடுத்துக் கொண்டுள்ளதாம்..

தாமரைகள்

தாமரைகள்

அமைச்சருக்கு எதிரான போஸ்டர்களை ஒட்டி, கரூர் முழுக்க திமுகவை டேமேஜ் செய்யும் முயற்சியும் ஆரம்பமாகி உள்ளதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல, அதிமுகவில் உள்ளவர்களை பாஜக பக்கம் கொண்டு வரும் வேலையிலும் செந்தில்நாதன் குதித்துள்ளாராம்.. இந்த வேலையைதான் திமுகவின் செந்தில்பாலாஜி சிறப்பாக செய்து வரும்போது, அவருக்கு போட்டியாக செந்தில்நாதன் களமிறங்கி உள்ளாராம்.. இதனால், கரூர் மாவட்டத்தில் பாஜக அதிரடியை கிளப்பி வருவதாக சொல்கிறார்கள்.

 ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

இதனிடையே, நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது.. "அதிமுகவில் இருந்து திமுகவுக்கு இடம்மாறி வந்தவர்களால்தான் இன்று கட்சி செயல்படுகிறது.. அன்று செந்தில்பாலாஜி,கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு என அதிமுகவை சேர்ந்தவர்கள்தான் இன்று கட்சியை நடத்துகிறார்கள் என்ற ஒரு விமர்சனம் உள்ளது, இது சரியா? அதிமுகவி இருந்து வேறு யாராவது திமுகவுக்கு வரப்போகிறார்களா? என்ற கேள்வியை நாம் முன்வைத்தோம்.. அதற்கு செந்தில்பாலாஜி சொன்னதாவது:

 ஸ்பீடு + உழைப்பு

ஸ்பீடு + உழைப்பு

அதிமுகவின் தாய்வீடு திமுகதான்.. எங்கள் தாய்வீட்டிற்கு நாங்கள் வருவதற்கு எங்களுக்கு என்ன தயக்கம்.. திமுக பக்கம் வருவதற்கு நிறைய பேர் இன்னமும் தயாராக இருக்கிறார்கள்... இதற்கு காரணம், முதல்வர் ஸ்டாலினின் ஆளுமைதான்.. அவரது தைரியம் யாருக்கு வரும்? தன்மானத்தையும், அடையாளத்தையும் விட்டுக்கொடுக்காத முதல்வர்.. இதையெல்லாம் மக்கள் யோசிக்கிறார்கள்.. முதல்வரின் திட்டங்கள், அறிவிப்புகள் என்பதுடன், அவைகளை உடனடியாக செயல்படுத்தும் அக்கறை இதையும் கவனிக்கிறார்கள்.. மொத்தத்தில் ஸ்டாலினின் சிந்தனை + வேகம் இவை இரண்டும்தான் தனி சிறப்பு.. இதற்காகவே பலரும் திமுக பக்கம் வர நினைக்கிறார்கள்" என்றார்.

 அரசல் புரசல்கள்

அரசல் புரசல்கள்

ஆக, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு யார் வர போகிறார்கள் என்று தெரியவில்லை.. செந்தில்பாலாஜியை வீழ்த்த செந்தில்நாதன் போடும் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா என்று தெரியவில்லை.. கரூர் திமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா என்று தெரியவில்லை.. அப்படி ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் ஏற்பட்டு அண்ணாமலை போட்டியிடுவாரா என்று தெரியவில்லை.. சிவகங்கை பாஜக புள்ளிகள் திமுக பக்கம் வரப்போகிறார்களா என்றும் தெரியவில்லை.. ஆனால் இவையெல்லாம், அரசல் புரசலாக ஓடிக் கொண்டிருக்கிறது..!

English summary
2 Major BJP Seniors may join in DMK Soon, what happened in Sivagangai DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X