அமமுக அதகளம்- 'ரஜினிகாந்த்'-ன் மக்கள் அரசு கட்சி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு
சென்னை: சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி, மக்களரசு கட்சி ஆகியவை இணைந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக தலைமையில் 4 அணிகள் களம் காண்கின்றன. அமமுக கட்சியானது ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை சங்கம் ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடுகள் செய்துள்ளது.

ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகள், கோகுல மக்கள் கட்சி, மருதுசேனை சங்கத்துக்கு தலா ஒரு தொகுதி என வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அமமுகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி, மக்களரசு கட்சி ஆகியவையும் அமமுக கூடணியில் இணைந்துள்ளன. விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சிக்கு திருவிடைமருதூர் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தினகரன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மக்களரசு கட்சிக்கு திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் என்ற அருள்மொழி வர்மன், தினகரன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications