சென்னையில் அரசு இடத்தை பூர்வீக சொத்தாக்கிய சகோதரிகள்! ரூ1.5 கோடிக்கு மளிகைகடைகாரருக்கு விற்று விபூதி
சென்னை: சென்னையில் புறம்போக்கு இடத்தை தங்களது பூர்வீக சொத்து எனக் கூறி ரூ.1.50 கோடிக்கு விற்பனை செய்து மளிகைக் கடை வியாபாரியை ஏமாற்றிய சகோதரிகள் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
நிலம் வாங்கும் போது எப்போதுமே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிலத்தை வாங்கும் போதே அதில் வில்லங்கம் இருக்கிறதா? முறையான ஆவணங்கள் உள்ளதா? என அனைத்தையும் பரிசோதித்து வாங்க வேண்டும். இல்லையென்றால் வாழ்நாள் சேமிப்பை எல்லாம் திரட்டி, வாங்கும் நிலத்தால் பின்னாளில் பெரிய பெரிய சிக்கல்கள் வந்து நிற்கும்.

அதிலும் சென்னை போன்ற பெருநகரங்களில் நிலமோசடி சம்பவங்களும் அடிக்கடி நடைபெறும் ஒன்றாக இருக்கிறது. சென்னை வில்லிவாக்கத்தில் தற்போது அப்படியான ஒரு சம்பவம் தான் நடைபெற்று இருக்கிறது. மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் சகோதரிகள் 1.5 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விவரம் வருமாறு:-
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருந்தாவது:- சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் சாமூண்டீஸ்வரி (வயது 45), சந்திரா (30) ஆகிய சகோதரிகள் உள்பட 3 பேர் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் தங்களின் பூர்வீக சொத்து வில்லிவாக்கம் எம்டிஎச் சாலையில், 9,108 சதுர அடி இருப்பதாகவும், அதை விற்க போவதாகவும் கூறி, அதற்கான டாகுமெண்ட்களை காண்பித்தனர்.
நானும் அதனை நம்பி, அந்த நிலத்தை ரூ. 1.50 கோடிக்கு வாங்கினேன். ஆனால், பிறகு விசாரித்ததில், அந்த இடம் புறம்போக்கு இடம் என்பது தெரிந்தது. எனவே அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை தங்களது பூர்வீக சொத்து என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர்.
மோசடி செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டதாக சாமூண்டீஸ்வரி, சந்திரா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சகோதரிகளான அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிந்த பிறகு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். சென்னையில், மளிகைக் கடைக்காரரிடம் ஒன்றரை கோடி நிலம் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications