திமுக அமைச்சரவையில் 15 புதுமுகங்கள்.. 19 முன்னாள் அமைச்சர்கள்!.. அசத்திய ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டசபையின் புதிய அமைச்சரவையின் பட்டியலில் புதிய முகங்கள் 15 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள்.
Recommended Video

நடந்து முடிந்த தேர்தலில் திமுக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. நாளை தமிழகத்தின் முதல்வராக முதல்முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் நேற்றைய தினம் ஆட்சி அமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் ஸ்டாலின் உரிமை கோரினார்.
இதையடுத்து ஆட்சி அமைக்க நேற்று மாலை ஸ்டாலினுக்கு அழைப்பு வந்தது. இது ஒரு புறமிருக்க ஸ்டாலின் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறை
அதிலும் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்டவை யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் திமுக அமைச்சரவை பட்டியல் வெளியானது. இதில் 19 பேர் முன்னாள் அமைச்சர்களாவர்.

தா மோ அன்பரசன்
அதாவது ஸ்டாலின், துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், தாமோ அன்பரசன், வெள்ளக்கோவில் சாமிநாதன், கீதா ஜீவன்,தா.ராமச்சந்திரன் ஆகியோர் ஏற்கெனவே 2006 இல் அமைச்சர்களாக இருந்தவர்கள். அது போல் திமுக ஆட்சியில் வேறு காலங்களிலும் அதிமுக ஆட்சியிலும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள் என்றால் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி ஆகியோராவர்.

உதயநிதி ஸ்டாலின்
அது போல் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகியுள்ளனர். ஸ்டாலின், சேகர் பாபு, மா சுப்பிரமணியன் ஆகியோர்தான் அந்த 3 பேர்.

காம்போ
இந்த புதிய அமைச்சரவையில் 15 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆர் காந்தி, மா சுப்பிரமணியன், பி மூர்த்தி, சிவசங்கர், பிகே சேகர் பாபு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ், மெய்யநாதன், சிவி கணேசன், மனோ தங்கராஜ், மதிவேந்தன், கயல்விழி, நாசர், பழனிவேல் தியாகராஜன், சக்கரபாணி ஆகியோர் அந்த புதுமுகங்களாவர்.

அமைச்சரவை
இந்த அமைச்சரவை பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்த உதயநிதிக்கு வேறு ஏதேனும் முக்கிய பதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications