சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமகவினர் சரமாரி கல்வீசி தாக்குதல்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு அளிக்கும் சென்னை போராட்டத்தில் பங்கேற்க வந்த பாமகவினர் பெருங்களத்தூரில் மின்சார ரயில்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

Recommended Video

    20% இடஒதுக்கீடு போராட்டம்: சென்னையில் மின்சார ரயில் மீது பாமகவினர் சரமாரி கல்வீசி தாக்குதல்- வீடியோ

    வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி சென்னையில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு தொடர் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

    20% Reservation Protest: PMK Cadres pelt stones at Trains

    இன்று முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை இந்த போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்க பிற மாவட்டங்களில் இருந்தும் பாமகவினர் சென்னை நோக்கி வந்தனர். ஆனால் சென்னை அருகே பெருங்களத்தூர் பகுதியிலேயே பாமகவினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    20% Reservation Protest: PMK Cadres pelt stones at Trains

    இதனால் சாலை மறியல் போராட்டத்தில் பாமகவினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஒரு கும்பல், அருகில் இருந்த ரயில் பாதைகளை நோக்கி ஓடினர். மேலும் அந்த வழியாக வந்த மின்சார ரயில்கள் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

    பாமகவினரின் ஆவேசமான ரயில்கள் மீதான கல்வீச்சு தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

    English summary
    PMK cadres are pelting stones at a train and staging rail roko near Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X