Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை.. எவ்வளவு வாக்குசதவீதம் பெற்றன.. 2026 தேர்தலில் எத்தனை இடங்களை அதிமுக ஒதுக்கி உள்ளது. இதில் சமார்த்தியமாக அதிக தொகுதிகளை பெற்ற கட்சி உண்மையில் எது? அதிமுக விட்டுக்கொடுத்துள்ளதா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவை இடம் பெற்று இருந்தன. இந்த முறை அமமுகவும் இணைந்துள்ளது. 2021ஐவிட பாஜக 2024ல் தனித்து போட்டியிட்டு வலிமையாக மாறி உள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் இந்த முறை போட்டியிடுகிறது. 2021ல் பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை.. எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றன. இந்த முறை எத்தனை தொகுதியில் போட்டியிட போகின்றன என்பதை பார்ப்போம்.

2021 vs 2026 Who Gains in the AIADMK Alliance What Are the Vote Shares of the BJP PMK and AMMK

2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆறு இடங்களிலும் போட்டியிட்டன. 2021 தேர்தலில் அ.தி.மு.க. தனித்து 33.29 சதவீத வாக்குகளையும் பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 39.71 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட்டு 2.62 சதவீத வாக்குகளைப் பெற்றது. பாஜக சார்பில் எல். முருகன், எச். ராஜா, வானதி ஸ்ரீநிவாஸன், அண்ணாமலை, குஷ்பு, வினோஜ் பி செல்வம், நயினார் நாகேந்திரன் உள்பட பலர் களம் இறங்கினார்கள். இதில் பாஜக நான்கு இடங்களில் வென்றது. கடந்த முறை 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக2026 சட்டசபை தேர்தலில் 27 இடங்களிலும் தனியாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தாமரை சின்னம் கொடுத்து ஐந்து இடங்களிலும் போட்டியிட வைத்துள்ளது. அதேபோல் ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், திருமாறன் ஆகியோரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் ஒட்டுமொத்தமாக 35 தொகுதிகளில் தாமரை சின்னம் போட்டியிடுகிறது.

2020 சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 3.80% சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. இந்த முறை 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் டிடிவி தினகரனின் அமமுக 2021 தேர்தலில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. மொத்தம் 165 தொகுதிகளில் போட்டியிட்டு 2.35% சதவீதம் வாக்குளை பெற்றது. இந்த முறை 11 இடங்கள் அமமுகவிற்கு அதிமுக ஒதுக்கி உள்ளது.

இதில் அமமுக, பாமக, இரண்டுமே தங்கள் செல்வாக்கு அதிகம் உள்ள முக்கியமான தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளன. பாமக 99 சதவீதம் வடமாவட்டங்களில் தான் போட்டியிடுகிறது. அதேபோல் அமமுக, தென்மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜகவும் முக்கியமான கொங்கு மண்டலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொகுதிகளை கேட்டு பெற்றுள்ளது. இதல் சமார்ததியமாக செயல்பட்டு இருப்பது பாஜக தான். கூட்டணி கட்சிகளை முன்பு அதிமுக தான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கும். ஆனால் இந்த முறை கூட்டணி கட்சிகளை தாமரை சின்னத்தில் பாஜக நிறுத்தி உள்ளது. இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+