இது ரொம்ப ஓவருங்க..திமுக அதிமுகவை அலையவிட்ட தேமுதிக! பிரேமலதாவை கழற்றி விட்ட தலைகள்! பனையூர் பக்கம்?
சென்னை: 2026 தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், பாஜக அதிமுக கூட்டணி அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் தவிர்த்து வருகிறது. பாமக உடன் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து விட்ட நிலையில் போக்கு காட்டி வருகிறது தேமுதிக. மகனுக்கு எம்எல்ஏ சீட், தனக்கு மாநிலங்களவை சீட்டு என இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில் உறுதியான முடிவை தெரிவிக்காததால், அதிமுகவும் திமுகவும் தேமுதிகவ கழட்டிவிடும் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் இந்த 2026 தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.
திமுக கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது தான். அதில் தொகுதி பங்கீடு மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக இன்னும் சில கட்சிகள் அந்த கூட்டணியில் இருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் லேசாக கேட்கத் தொடங்கி இருந்தாலும் திமுக தான் இறுதி முடிவு எடுக்கும். கடந்த ஆண்டு போலவே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுக கூட்டணியை இன்னும் இறுதி செய்யவில்லை. பாஜக மற்றும் ஏற்கனவே பாஜகவோடு கூட்டணியில் இருந்த ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றனர். பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் கூட்டணிக்கு சம்மதித்துள்ளார் அன்புமணி.
பாமக -அதிமுக- பாஜக கூட்டணி
விரைவில் பாமக -அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்த தேமுதிகவின் நிலைப்பாடு இன்னும் தெளிவாக தெரியவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது, ஜனவரி மாதம் கட்சியின் மாநாடு நடக்கும் அப்போது கூட்டணி குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என கூறி இருக்கிறார். இந்த நிலையில் தொகுதி பேரம் காரணமாகவே அதிமுக திமுக அழைப்பு விடுத்தும் பதிலளிக்காமல் இருக்கிறார் என்கின்றனர்.
தேமுதிக கூட்டணி குழப்பம்
தேமுதிக தலைமையின் நடவடிக்கைகளால், தேமுதிகவை கூட்டணியில் பேச்சுவார்த்தைகளில் இருந்து கழட்டி விடலாம் என அதிமுகவும் தேமுதிகவும் முடிவு எடுத்திருப்பதோடு இனி அந்தக் கட்சியுடன் கூட்டணி பேச வேண்டாம் என தலைவர்கள் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளையுமே அசால்டாக தேமுதிக தலைமை நினைக்கிறது. விஜயகாந்த் இருந்தபோது தேமுதிகவுக்கு பெரிய வாக்கு வங்கி இல்லை.
விஜயகாந்த்
இருந்த போதும் விஜயகாந்த்துகாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என நினைத்தால் அந்த கட்சி தலைமையோ மிகப்பெரிய கட்சி அளவுக்கு நடந்து கொள்கிறது. இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தையே தொடங்காத நிலையில் விருதுநகர் தொகுதியை மகனுக்கு ஒதுக்க வேண்டும் என டிமாண்ட் வைப்பதோடு மாநிலங்களவை சீட்டை ஒதுக்கியே ஆக வேண்டும் என பேசுவது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் பிடிக்கவில்லை. ஆனால் அதனை தலைமை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு 15 சதவீதத்துக்கு மேல் வாக்கு சதவீதம் இருப்பதாக நினைத்துக் கொண்டு, தாங்கள் செல்லும் கூட்டணி தான் வெற்றி பெறும் என பேசி வருகிறார்கள்.
தேமுதிக சீட் பேரம்
அதுமட்டுமில்லாமல் விஜய்யுடன் கூட்டணி சேரலாம் என நினைத்துக் கொண்டு இரு கட்சிகளையும் அசால்ட்டான மனப்பான்மையோடு நடத்துவது இரு தலைமைக்குமே பிடிக்கவில்லை. எனவே கடந்த சில தினங்களாகவே தேமுதிக தலைமையை அதிமுக தரப்பும் திமுக தரப்பும் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி பனையூர் பக்கம் சாயலாம் என பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுத்து இருக்கிறார் என்கின்றனர் தேமுதிகவினர்.
-
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications