அதே மெரினா.. அதே விமான சாகசம்.. 21 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியாக நடந்த அதிசயம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமத்துக்குள்ளாகினர். கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்று அதிமுக, பாஜக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு முன்பு 2003 இல் ஜெயலலிதா ஆட்சியின்போது விமானப் படை சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்திய விமானப் படையின் 92 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைப் பார்ப்பதற்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். இந்த நிகழ்வு லிம்கா கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர். நேற்று காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 72 விமானங்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். விமானப் படை வீரர்கள் வானில் பல வர்ண ஜாலங்களை நிகழ்த்தினர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வான் சாகசங்களை கண்டு வியந்தனர்.
இந்நிகழ்த்ச்சியைக் காண லட்டக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவிந்ததால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்தது. பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நடந்து செல்வதற்கு கூட மக்கள் சிரமப்பட்டனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காவல்துறையும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
கூட்ட நெரிசலால் சுமார் 240 பேர் மயக்கம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் கூட வர முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டது அப்பகுதியில் பதைபதைப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் கார்த்திகேயன் (34), ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட தினேஷ்குமார் (37), கொருக்குப்பேட்டை ஜான் பாபு (56), பெருங்களத்தூர் சீனிவாசன் (52) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மெரினா காமராஜர் சாலை அருகே மயங்கி கிடந்த 55 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிக மோசமாக இருந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். பலர் மயங்கிய நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவில்லை. வந்த ஆம்புலன்ஸ்களும் நெரிசலில் சிக்கின. தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவத்துக்கு அதிமுக, பாஜக, நாதக, தவெக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2013 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஜெயலலிதா ஆட்சியின்போது இதேபோல இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
சென்னையில் முதல்முறையாக 21 ஆண்டுகளுக்கு முன்பு 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாகசத்தில் சுகோய் எஸ்யூ 30, ஜாகுவார், எம்ஐஜி 29, சேடக் ஹெலிகாப்டர்களின் கண்கவர் சாகசங்கள் நடைபெற்றன. இதனைக் காண 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு விமான சாகசங்களை கண்டு ரசித்தனர். ஏரோபாட்டிக்ஸ் குழு சூர்ய கிரண், ஸ்கை டைவின் குழுவான ஆகாஷ் கங்கா ஆகியவை ரசிகர்களை வானிலேயே கட்டிப் போட்டனர்.
இந்நிகழ்ச்சியில், அன்றைய முதல்வர் ஜெயலலிதா, ஏர் மார்ஷல் எஸ். கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் மேலான மக்கள் கலந்துகொண்ட நிலையில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி இந்நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.
ஆனால், தற்போது நடத்தப்பட்டுள்ள விமான சாகச நிகழ்ச்சியால் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திமுக அரசு செய்யத் தவறியுள்ளது. முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தனி வண்டி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன.
ஆனால், பொதுமக்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் திமுகவின் அலட்சியத்தையே காட்டுகின்றது என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது சமூக வலைதளங்களில் விவதாங்களை கிளப்பியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications