திமுகவால் முடியாததை 24 மணி நேரத்தில் முடித்த விஜய்! காங்கிரஸை வளைத்த தவெக! அறுந்த 22 வருட பந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கு விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது அதிகாரப்பூர்வ ஆதரவை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான வேகத்தில், எந்த இழுபறியும் இல்லாமல், ஒரு தேசியக் கட்சி தவெக-வின் பின்னால் நின்றிருப்பது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி முடிவு, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை மொத்தமாக மாற்றியமைத்திருப்பதோடு மற்ற கட்சிகளையும் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக, தமிழக அரசியலில் ஒரு புதிய கட்சி காலடி எடுத்து வைக்கும்போது விமர்சனங்களும், சந்தேகங்களும் எழத்தான் செய்யும்.. ஆனால் அவைகளை தவிடுபொடியாக்கி, ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.

Congress

எப்போதுமே ஒரு புதிய கட்சி உருவானால், அது மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கவும், அங்கீகாரம் பெறவும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், தவெக விவகாரத்தில் காட்சிகள் தலைகீழாக மாறியுள்ளன.

விஜய் எடுத்த சூப்பர் நகர்வு

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மற்ற கட்சிகள் நிதானமாக யோசிப்பதற்குள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தானாக முன்வந்து தவெக-வுக்கு ஆதரவு அளித்திருப்பதை இந்திய அரசியலில் நிகழ்ந்த ஒரு முக்கிய நகர்வாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் உற்றுநோக்குகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தை "அரசியல் முதிர்ச்சியற்றவர்கள்" என்று விமர்சித்தவர்களுக்கு, அக்கட்சி தனது மவுனத்தின் மூலமே சரியான பதிலடி கொடுத்திருக்கிறது. எந்தவிதமான ஆரவாரமுமின்றி, உட்கார்ந்த இடத்திலிருந்தே மற்ற கட்சிகளை பரபரப்படைய செய்திருப்பது விஜய்யின் அரசியல் வியூகத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு

குறிப்பாக தேசியக் கட்சியான காங்கிரஸ், தவெக-வின் கொள்கைகளை ஏற்று நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்திருப்பது அந்த கட்சியின் செல்வாக்கை மேலிடம் வரை கொண்டு சேர்த்திருக்கிறது. உண்மையில் இது சாதாரண விஷயம் கிடையாது.. இது வெறும் ஆதரவு மட்டுமல்ல, தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கிவிட்டதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பாகவே மூத்த அரசியல் ஆய்வாளர்கள் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதே காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் காலங்களில் காட்டிய நிதானமும், இழுபறியும் தமிழக அரசியல் வரலாறு அறிந்தது... அவ்வளவு ஏன், பல நேரங்களில் திமுகவை ஒரு மாத காலம் வரை காத்திருக்க வைத்து, அதன் பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்த நிகழ்வுகளும் இங்கு உண்டு.

மின்னல் வேகத்தில் காங்கிரஸ் முடிவு

ஆனால் இப்போது தவெக விஷயத்தில் காங்கிரஸ் காட்டியுள்ள மின்னல் வேக வேகம், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு ஒரு மாற்றாக தவெக உருவெடுத்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

திமுக போன்ற நீண்ட கால அனுபவம் கொண்ட கட்சிகளுக்கே கிடைக்காத இந்தத் தார்மீக முன்னுரிமை, விஜய்யின் அரசியல் அணுகுமுறைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கட்சி நிர்வாகிகள் பெருமிதம் கொள்கிறார்கள்.

திமுக நிசப்தம்

இப்போது தமிழக அரசியல் களமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில், திமுக தரப்பில் வெறும் நிசப்தம் நிலவுகிறது.. அமைதியும், மவுனமும் நிலவுகிறது.. இது பல கேள்விகளை எழுப்புகிறது.

தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி மற்றும் தேசியக் கட்சிகளின் ஆதரவு, தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் கணக்குகளை அடியோடு மாற்றி எழுதியுள்ளது. காமராஜர், பெரியார், அம்பேத்கர் எனத் தவெக முன்னிறுத்தும் கொள்கை முழக்கங்கள், காங்கிரஸை தன்பக்கம் ஈர்க்கும் ஒரு பலமான பாலமாக அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தேசிய கட்சியை ஈர்த்து..

இதையே நச்சென சொல்ல வேண்டுமானால், காலம் காலமாக பேணப்பட்டு வந்த அரசியல் மரபுகளைத் தவெக ஒற்றை நாளில் உடைத்து எறிந்துவிட்டது.. விமர்சனங்களைத் தாண்டி ஒரு தேசியக் கட்சியையே தன்பக்கம் ஈர்த்துள்ள இந்தத் தாக்கம், தமிழகத்தின் ஆட்சி அதிகார போட்டியில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற கட்சிகளுக்கு இது ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தாலும், தமிழக அரசியலின் எதிர்காலம் இனி ஒரு புதிய பாதையில் பயணிக்க தயாராகிவிட்டது என்பற்கான அறிகுறி இன்று தென்பட்டுள்ளது.. மொத்தத்தில் ஆட்டம் இப்பதான் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கு... பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+