விஜயகாந்த் உள்பட 3 பேர் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வாபஸ்! ஏன் என்னாச்சு?
சென்னை: தமிழகத்தில் பிரேமலதா விஜயகாந்த், தமிழிசை சவுந்திரராஜன், செல்வப்பெருந்தகை ஆகிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் அவை தற்போது வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறையும் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

அந்த வகையில் மேற்கொண்ட 3 பேரின் வீடுகளுக்கும் வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது சாலிகிராம் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அது போல் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த போது அவரது சென்னை வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அது போல் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அப்போது கேட்டதை அடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்த பாதுகாப்பு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது போல் பாதுகாப்பு கொடுத்தது குறித்து 6 மாதங்களுக்கு ஒரு முறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்துவர். அப்போது அந்த 3 அரசியல் கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு, தற்போது ஏதேனும் அச்சுறுத்தல் இருக்கிறதா என கேட்டனர்.
அவர்கள் மூவரும் இல்லை என சொன்னதை அடுத்து போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதே வேளையில் உளவுத் துறை தகவலின்படியும் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிந்ததை அடுத்து பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications