அடுத்த 25 ஆண்டுக்கான பிளான் ரெடி.. சென்னையில் பயணம் செய்யும் முறையே மாறப்போகிறது.. கவனம்!
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (CUMTA), 25 வருடங்களுக்கான விரிவான போக்குவரத்து திட்டத்தை (Comprehensive Mobility Plan - CMP) உருவாக்கி வருகிறது.

சென்னையின் போக்குவரத்து நெரிசல் மற்றும் தீர்வுகள்
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், சாலைப் பாதுகாப்பை அதிகரிப்பதாகும். இதுகுறித்து CUMTA தரப்பு கூறுகையில், "சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை கொண்டு வர உள்ளோம். பொதுப் போக்குவரத்து விருப்பங்களை ஊக்குவிப்பதும், கடைசி மைல் வரை தடையற்ற இணைப்பை வழங்குவதும்தான் எங்கள் முக்கிய குறிக்கோள்," என்றுள்ளனர்.
CUMTA என்பது, தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் ஒரு பிரிவு ஆகும். இது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 5904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், போக்குவரத்து தொடர்பான அனைத்து துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரமாக விளங்குகிறது. இந்த குழுவில், தனியார் சந்தையில் இருந்து பணியமர்த்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் இருந்து வந்த அதிகாரிகள் ஆகியோர் உள்ளனர்.
CMP திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த பிராந்தியத்தில் 50,000 வீடுகளில் CUMTA ஆய்வு நடத்தியது. இதன் மூலம், இந்த மாஸ்டர் பிளானுக்கான உள்ளீடுகளைப் பெற முடிந்தது. இதுகுறித்து CUMTA-வின் மூத்த போக்குவரத்து திட்டமிடலாளர் பூனம் சபிக்கி கூறுகையில், "அடிப்படையாக, மக்களின் பயண முறை, அவர்கள் எப்படி பயணிக்கிறார்கள், எந்த முறைகளைப் பயன்படுத்துகிறார்கள், அமைப்பில் உள்ள இடைவெளிகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நிறைய தரவுகளின் அடிப்படையில் ஆய்வைச் செய்து திட்டங்களை கொண்டு வர உள்ளோம், என்றார்.
இந்த ஆய்வில், நகரத்தின் உள்ளே 34% மக்கள் இரு சக்கர வாகனங்களிலும், 7% பேர் கார்களிலும், மேலும் 7% பேர் வாடகை வண்டிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களிலும் பயணம் செய்வது தெரியவந்தது. போதுமான எண்ணிக்கையில் பொது போக்குவரத்து பேருந்துகள் இல்லாத காரணத்தால், மக்கள் தனியார் வாகனங்களைத் பயன்படுத்துகிறார்கள் என்றும், இது போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பொதுப் போக்குவரத்து மேம்பாடு
எனவே, பொதுப் போக்குவரத்து, நடைபாதை மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடுகள் CMP-யின் மிக முக்கியமான திட்டங்களாக உள்ளன. பேருந்துகளை எங்கே அதிகரிக்க வேண்டும், பேருந்துகளுக்கான முன்னுரிமை அல்லது பிரத்யேக பாதைகள், டெர்மினல் டெப்போக்களுக்கான இடங்கள் ஆகியவை எங்கே அதிகரிக்கப்பட வேண்டும், எங்கே மாற்றப்பட வேண்டும் என்று ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயில்கள் போன்ற அமைப்புகள் அனைத்தும் இன்னும் தனித்தனியாக இயங்குகின்றன. அவற்றுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்CUMTA உருவாக்கி வரும் டிக்கெட் செயலி ஆகும். இது தயாரானதும், குடிமக்கள் பொதுவான QR குறியீடு டிக்கெட்டைப் பயன்படுத்தி, மூன்று முறைகளிலும் போக்குவரத்து சேவைகளைப் பெறலாம்.
சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள பேருந்துகளில் எல்லாம் பயணிகள் தகவல் அமைப்பு வழங்கப்படும். அதாவது பேருந்துகளில் தானியங்கி மூலம் எந்த நிறுத்தம் என்ற அறிவிப்பு வெளியிடப்படும். இது போக உலக வங்கி மற்றும் ஜெர்மன் வங்கியான KfW ஆகியவற்றிலிருந்து நிதியுதவியுடன் 1,500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.
CUMTA மதிப்பீட்டின்படி, நகரத்தில் 6,500 - 7,000 பேருந்துகள் தேவை. ஆனால், தற்போதுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 3,300 மட்டுமே (தற்காலிகமாக பயன்பாட்டில் இல்லாதவை உட்பட). "நாங்கள் சில வழித்தடங்களில் (இரட்டை அடுக்கு பேருந்துகளை) பரிந்துரைக்கிறோம். முதலில், சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்," என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதசாரிகளுக்கான வசதிகள்
பொதுப் போக்குவரத்தைத் தவிர, நடைபாதை நெட்வொர்க்கை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதன் மூலம், பாதசாரிகளின் நடமாட்டத்தை மேம்படுத்துவதையும் CMP நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பாதசாரிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (CUMTA), 25 வருடங்களுக்கான விரிவான போக்குவரத்து திட்டத்தை (Comprehensive Mobility Plan - CMP) உருவாக்கி வருகிறோம் என்று கூறி உள்ளார். .












Click it and Unblock the Notifications