3 சீட்டாமே அவருக்கு.. "டிட்டோ வைகோ".. திமுகவையே மிஞ்சி டெல்லி பறக்கும் "தலைவர்".. ஹாட்டில் அறிவாலயம்

திமுக கூட்டணியிடம், மநீம 3 சீட்டுகளை கேட்டு காய் நகர்த்தலை துவங்கி உள்ளதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் கமல் இடம்பெறுவார் என்ற அனுமானங்கள் வலம்வரும் நிலையில், அது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று தமிழக அரசியல் களத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.. என்னவாம்?

மநீம பொறுத்தவரை, இந்த முறை தேர்தலில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும், தங்களின் எதிர்கால அரசியலை தீர்மானிக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது..

அதனால்தான், தனித்து போட்டியிடுவோம் என்று துணிந்து சொல்ல முடியாத நிலைமை மய்யத்துக்கு சூழ்ந்துள்ளது.. அதேபோல, மய்யத்தை தாங்கி பிடித்த பல தூண்கள் இன்று அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள்.. தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளில் தொண்டர்களும் சோர்ந்து உள்ளனர்.. அதனால், கூட்டணி என்ற விஷயத்தை தவிர்க்க முடியாத நிலைமை, கமலுக்கு ஏற்பட்டுள்ளது.

 ப்ளான் 3

ப்ளான் 3

திமுக வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது.. அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் திமுகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. எப்படியாவது மய்யத்தை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அசைன்மெண்ட் உதயநிதியிடம் தரப்பட்டு, கூட்டணி தொடர்பாக சீட் விவகாரமும், தொகுதி உடன்பாடும் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

 1+1 அனுமானம்

1+1 அனுமானம்

அதாவது திமுகவை பொறுத்தவரை, 1+1 சீட்களை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்யும் என்கிறார்கள்.. அல்லது 2 மக்களவை தொகுதிகளை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்வது என்றும், பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே களமிறக்கலாமா என்றும் திமுக யோசனை செய்வதாக சொல்லப்படுகிறது.. அதாவது கடந்த தேர்தலில் வைகோவுக்கும் இதே பார்முலாவைதான் திமுக கையில் எடுத்தது.. 1 +1 என்ற ரீதியில், சீட்டுகளை ஒதுக்கி, தமிழகம் முழுவதும் வைகோவை பிரச்சாரத்துக்கும் அனுப்பியிருந்தது.. அந்த வகையில், கமலையும், ராஜ்யசபாவுக்கு அனுப்பி, பிரச்சாரத்துக்கும் அனுப்ப திமுக பிளான் போட்டு வருவதாக சொல்கிறார்கள்.

 ஸ்ட்டிரைட் டீல்

ஸ்ட்டிரைட் டீல்

இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை என்றாலும், கமல் இணைந்தால், அது திமுக கூட்டணிக்கு பலமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.. காரணம், நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குகளை கமல் வெகுவாக அள்ளுவார் என்பதே திமுக போடும் கணக்கு.. எனவே திமுகவுடனான பேச்சுவார்த்தை எப்போது முடிவுக்கு வரும்? திமுகவின் கூட்டணி நகர்வுக்கு கமல் ஒப்புக் கொண்டாரா? என்ற ஆர்வம் அதிகரித்தபடியே வரும்நிலையில்தான், திடீரென திமுகவை விட்டுவிட்டு, ஸ்டிரைட்டாக காங்கிரஸ் தலைமையையே கமல் டச் செய்துவிட்டது சற்று அதிர்வை உண்டுபண்ணி வருகிறது.

 விஷயமே வேற

விஷயமே வேற

24ம் தேதி டில்லியில் நடக்க உள்ள ராகுலின் பாதயாத்திரையில் கமல் பங்கேற்க உள்ளார்... அதிலும் காங்கிரஸ் அழைப்பில் கமல் பங்கேற்க உள்ளார்.. இதனை கேஎஸ் அழகிரியும் வரவேற்றுள்ளார்.. காங்கிரஸ் நிகழ்வில் கமல் பங்கேற்பது, திமுக கூட்டணியில் இணைவதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், விஷயமே வேறு என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. காங்கிரஸ் நிகழ்ச்சியில் மட்டுமே கமல் பங்கேற்க போகவில்லையாம்.. தேர்தல் கூட்டணிக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கவே கமல் செல்வதாக தகவல்கள் பரபரக்கின்றன.

 3 + 1

3 + 1

அதாவது, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 3 தொகுதிகளை பெற கமல் விரும்புகிறாராம்.. ..ஆனால் ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரப்படும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டதாக தெரிகிறது.. ராமநாதபுரம் தொகுதியை மய்யத்துக்கு ஒதுக்க திமுக கூட்டணி விரும்புகிறது.. ஆனால் தென்சென்னை மற்றும் கோவை தொகுதிகளையே பெற கமல் விருப்பம் காட்டுகிறார்.. இந்த தொகுதிகளில் ஒன்றில் கமலும், இன்னொரு தொகுதியில், கட்சியின் துணை தலைவர் மவுரியாவும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார்களாம்.. 3 சீட் என்றால் திமுக கூட்டணியில் ஒதுக்கப்படுமா? என்று தெரியவில்லை.. அநேகமாக வைகோ பாணியில் 1+1 என்ற முடிவுக்கே கடைசியில் வந்து நிற்பார்கள் என்கிறார்கள்.

 வேட்டை வசூல்

வேட்டை வசூல்

அதேசமயம், மய்யத்தின் தேர்தல் செலவுகளை திமுகவே ஏற்கும் என்று ஏற்கனவே உறுதி தரப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.. செலவை கூட்டணி தலைமை ஏற்பது என்பது கமலுக்கு மகிழ்ச்சியே என்றாலும், தன் தரப்பில் எதற்குமே தயாராக இருக்க வேண்டும் என்று கமல் நினைப்பதாக தெரிகிறது.. எனவேதான், மூத்த நிர்வாகிகளிடம் தேர்தல் நிதி வசூல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி உள்ளார்.. அதன்படி, தொழிலதிபர்களிடம் நன்கொடை பெறவும், அதற்கான வழிகளை ஆராயவும் கட்சியில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. எப்படியோ, எம்பி தேர்தலுக்கான முதல் கட்டப் பணிகளை கமல் முடுக்கிவிட்டுள்ளது, மநீம தொண்டர்களை, பெருத்த நம்பிக்கையிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தி வருகிறது..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+