தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா.. ஆனாலும் ஒரு குட் நியூஸ் இருக்கே!
சென்னை: தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை விட குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்கள் எப்போதும் மாலை நேரங்களில் சுகாதாரத் துறையினால் வெளியிடப்படும். இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா குறித்த தகவல்கள் வெளியானது.
அதில் தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 6,90,936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று ஒரே நாளில் பிசிஆர் மூலம் 85,130 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

192 பரிசோதனை கூடங்கள்
இதுவரை 90 லட்சம் சேம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய கொரோனா புள்ளி விவரங்களில் 2095 ஆண்களும், 1,441 பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 192 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பலி
இன்று ஒரே நாளில் 4,515 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6,42,152 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 பேராகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,691 பேராகும்.

கொரோனா பரிசோதனை
இன்று ஒரே நாளில் 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 87,80,080 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 38,093 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் இன்று 2-ஆவது நாளாக 4 ஆயிரத்தை விட கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்கள், பெண்கள்
இதுவரை 12 வயதுக்குட்பட்டவர்களில் சிறுவர்கள் 13,169 பேருக்கும் சிறுமிகள் 11,904 பேருக்கும் என மொத்தம் 25073 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அது போல் 13 வயது முதல் 60 வயது வரை 3,50,015 ஆண்களுக்கும் 2,29,789 பெண்களுக்கும் என மொத்தம் 5,79,836 பேருக்கும் அது போல் 60 வயதை கடந்தவர்களில் 54032 ஆண்களுக்கும் 31995 பெண்களுக்கும் என மொத்தம் 86027 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications