2 நாளில் சென்னையை உலுக்கிய 3 கத்திக்குத்து! ரிப்போர்ட் அனுப்புங்க! போலீசிடம் கண்கள் சிவந்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த 48 மணி நேரத்தில் 3 மாபெரும் கத்தி குத்து சம்பவங்கள் நடந்து உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருணிடம் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை கேட்டு உள்ளாராம்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய் துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

crime

குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விக்னேஷ் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டாலின் அறிக்கை: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும், என்று குறிப்பிட்டு உள்ளார்.

48 மணி நேரத்தில் 3 சம்பவங்கள் : சென்னையில் கடந்த 48 மணி நேரத்தில் 3 மாபெரும் கத்தி குத்து சம்பவங்கள் நடந்து உள்ளன.

முன்னதாக நேற்று முதல்நாள் இரவு திருவிக நகரில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தனசேகர் என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். முன்பகை காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அவரை குத்தியது.

இன்னொரு சம்பவம் : அதேபோல் சென்னை திருவொற்றியூரில், காய்கறி கடை நடத்தி வந்த பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற கணவருக்கும் தலையில் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரி (55). இவரது மனைவி கௌரி (50). இவர்கள் இருவரும் அதே பகுதியில் சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று மாலை இவர்களது கடைக்கு வந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த சம்பவங்கள் சென்னை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இப்படி சென்னையில் கடந்த 48 மணி நேரத்தில் 3 மாபெரும் கத்தி குத்து சம்பவங்கள் நடந்து உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருணிடம் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை கேட்டு உள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+