Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முக்கோண அடி".. பாஜகவை விடுங்க.. "நிறம்" மாறிய தலைவர்.. ஓபிஎஸ்ஸின் ராஜதந்திரம்.. அப்ப எல்லாம் ஓவரா?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் 3 பிளான்களை செய்து முடித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபகாலமாகவே ஓபிஎஸ் எடுத்து வரும், நுட்பமான அரசியல் பலரது கவனங்களையும் திசைதிருப்பி வருகிறது.. ஓபிஎஸ் முன்னெடுத்து வரும் பிளான்களில், சசிகலா, பாஜக தரப்பு என்ன செய்ய போகின்றன என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

அதிகார மோதல் எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பில் வெடித்துள்ளது.. இதனால், இருவருமே கோர்ட்டை நாடியுள்ளனர்.. கோர்ட்டில் இது தொடர்பான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையி்ல், இன்னும் எந்தவிதமான தீர்ப்பும் வரவில்லை..

எப்படியும் நீதிமன்ற தீர்ப்பு தமக்கு சாதகமாக வரும் என்பதால், கட்சியை அப்போது சசிகலாவிடம் ஒப்படைப்பேன் என்றும் நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம் ஓபிஎஸ்.. அதேசமயம், எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு மூலமாக பல வழிகளில் நெருக்கடிகளை உருவாக்கிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாராம் ஓபிஎஸ்..

 ஷாக்கிங் பிளான்

ஷாக்கிங் பிளான்

அதாவது பொதுச்செயலாளர் சசிகலா, துணைப்பொதுச் செயலாளர் ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கவுரவப்பதவி, கொங்குவில் உள்ள சீனியர்களுக்கு டாப்மோஸ்ட் பதவி என பல பிளானில் உள்ளாராம் ஓபிஎஸ்.. இவ்வளவையும் நடக்க போகும் பொதுக்குழுவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எடப்பாடியை கழட்டிவிட்டுவிட்டு, சசிகலா & தினகரன் ஆதரவுடன் நடத்தப்போகும் இந்த பொதுக்குழு எப்போது என்றுதான் தெரியவில்லை.. அதற்குள் எவ்வளவு ஆதரவாளர்களை எடப்பாடி டீமில் இருந்து தங்கள் பக்கம் இழுக்க முடியுமோ அதற்கான வேலைகளும் ஆரம்பமாகி உள்ளன.

 இணக்கம் + நெருக்கம்

இணக்கம் + நெருக்கம்

நீதிமன்ற தீர்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், அதிமுகவுக்குள் ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய போகிறார்? இதில் பாஜக ரோல் என்ன? சசிகலாவின் பிளான் என்ன என்பது குறித்த எந்தவிதமான தகவல்களும் இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. எனினும் இதுகுறித்து சில தகவல்கள் அரசியல் களத்தை வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.. அந்தவகையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் பலராலும் வியந்து பார்க்கப்பட்டு வருகிறதாம்.. எடப்பாடியிடம் ஒவ்வொரு விஷயத்திலும் விட்டுக்கொடுத்துவிட்டு, 5 ஆண்டு காலம் புறக்கணிக்கப்பட்ட ஓபிஎஸ்ஸா இத்தனை வியூகங்களையும் இந்த ஒரு மாத காலமாக, வகுத்து வருகிறார் என்பது ஆச்சரியத்தை தந்துள்ளதாம்.

 ஓட்டைகள் - சட்டங்கள்

ஓட்டைகள் - சட்டங்கள்

ஓபிஎஸ் இப்படி எல்லாம் அரசியல் செய்ய போகிறார் என்று எடப்பாடியே எதிர்பார்க்கவில்லையாம்.. அதனால்தான், சட்டரீதியாக அலசி ஆராயாமல் அவசரமாக பொதுக்குழுவை நடத்தி முடித்துவிட்டு, அதை நினைத்து தற்போது வருத்தப்பட்டு வருகிறாராம்.. இதற்கெல்லாம் காரணமான, சிவி சண்முகத்தின் மீது கோபத்தை காட்டினாலும், சட்டத்தின் ஓட்டைகளை சமாளிக்க முடியாமல், வலுவான ஆதாரங்களை இதுவரை சமர்ப்பிக்கவும் முடியாமல், திணறி வருவதாக கூறுகிறார்கள்.

 டோட்டல் மாற்றம்

டோட்டல் மாற்றம்

இப்படிப்பட்ட சூழலில்தான், தந்திரமாக அரசியல் செய்யும் ஓபிஎஸ், தொண்டர்களிடம் ஸ்கோர் வாங்கி வருகிறார்.. ஒன்றிணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும், எடப்பாடி புறக்கணித்துவிட்டார்.. எடப்பாடி எப்படியும் தன்னுடன் சேர மாட்டார் என்பது ஓபிஎஸ்ஸுக்கும் முன்கூட்டியே தெரியும் என்றாலும், தொண்டர்களிடம் அனுதாபம், நல்லெண்ணத்தை சம்பாதிக்கவே இப்படி ஒரு பிளானை ஓபிஎஸ் அறிவித்தாராம்.. அதற்கேற்றபடி, "கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார், ஆனால், எடப்பாடி என்ன இப்படி பிடிவாதம் பிடிக்கிறாரே" என்ற பேச்சுக்களும் தொண்டர்கள் மத்தியில் எழ ஆரம்பித்துவிட்டது.

அசைன்மெண்ட்

அசைன்மெண்ட்

அதேபோல, சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளதும் ஓபிஎஸ்ஸின் இன்னொரு தந்திர அரசியல் என்கிறார்கள்.. சிறை சென்றுவிட்டு வந்த சசிகலா, கட்சியில் முன்னிறுத்தவோ, முக்கிய பதவியை அலங்கரிக்கவோ, பாஜக மேலிடம் ஒப்புக் கொள்ளாது.. ஊழல் புகாரில் சிறைக்கு சென்றவர்களை ஒருபோதும் ஆதரிக்கவும் செய்யாது என்பதையும் ஓபிஎஸ் நன்கு அறிந்து வைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, மேலிட ஆதரவு தனக்குதான் கிடைக்கும் என்பதையும், கணித்து வைத்துள்ளதால்தான், சசிகலாவுக்கும் ஓபிஎஸ் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாக தெரிகிறது..

 ராமராஜன்

ராமராஜன்

சசிகலாவின் ஆதரவு ஓபிஎஸ்ஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சசிகலாவும் அதற்கு குறுக்கே நிற்க வாய்ப்பில்லை என்கிறார்கள். தென்மண்டலத்தை சேர்ந்த மாஜிக்கள், பிரபலங்களுக்கும் வலைவிரிக்கப்பட்டு, அவர்களும் ஆதரவு தந்து வருகின்றனர்.. இதுவும் ஓபிஎஸ் மேற்கொண்ட முக்கிய அரசியலில் ஒன்று என்கிறார்கள்.. முக்குலத்தோர் சமுதாய ஆதரவு மட்டுமல்லாமல், பொதுமக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காகவே, கொங்குவில் பாக்யராஜ், தென்மண்டலத்தில் ராமராஜன் என நடிகர்களுக்கு பிரச்சார அசைன்மென்ட்களும் பறக்க உள்ளதாக தெரிகிறது.. அதுபோலவே ஓபிஎஸ் புதிதாக ஒரு சவால் விடுத்துள்ளார்.

திணறல்

திணறல்

"எடப்பாடி ராஜினாமா செய்யட்டும். நானும் ராஜினாமா செய்கிறேன்.. கீழே போய் தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவு செய்யட்டும். யார் தலைமை பொறுப்பிற்கு வர வேண்டும் என்று... பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என்று குற்றம்சாட்டுகிறார்கள். அதிமுகவின் தொண்டர்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். கழகத்தின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்வார்கள்" என்று செக் வைத்துள்ளார்.. ஓபிஎஸ் இப்படி சொன்னதற்கும் ஒரு காரணம் உள்ளதாம்..

அத்தாட்சி

அத்தாட்சி

"கட்சி விதிப்படி பொதுக்குழுவில் எந்த விஷயத்திலும் நடக்கவில்லை.. தொண்டர்கள் விரும்பினார்கள் என்கிறீர்களே, அதற்கு என்ன அத்தாட்சி" என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கேட்ட கேள்விக்கு இதுவரை ஆதாரங்களுடன் தெளிவான பதிலை எடப்பாடி தரப்பில் முன்வைக்கப்படவில்லை.. இந்தபாயிண்டைதான் ஓபிஎஸ் தரப்பு வலுவாக பிடித்துக் கொண்டது.. இதே பாயிண்டை முன்னிறுத்திதான், தொண்டர்களிடமே நீதி கேட்கும் வகையில், எடப்பாடிக்கு சவால் விடுத்துள்ளாராம் ஓபிஎஸ்.. இப்படி ஓபிஎஸ் தரப்பின் நுணுக்கமான அரசியல்கள், எடப்பாடி தரப்பையும் அதிர வைத்து வருகிறதாம்..!

4வது பிளான்

4வது பிளான்

சசிகலா ஓபிஎஸ்ஸுக்கு மறைமுகமாக உதவி செய்து வருவதாக தகவல்கள் கசிந்து வரும் நிலையில், இன்னொரு பிளானையும் போட்டு வருகிறாராம் ஓபிஎஸ்.. அதாவது, எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு வழக்கு தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய சூழல் உள்ளதால், இதிலும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று ஓபிஎஸ் டீம் பலமாக நம்புகிறது.. அப்படி சாதகமான தீர்ப்பு வந்தால், அதிமுக ஆபீசுக்கு சசிகலாவை வரவழைப்பது குறித்தும் பிளான் ஓடிக் கொண்டிருக்கிறதாம்..

5வது பிளான்

5வது பிளான்

காரணம், ஏற்கனவே, தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தந்த உத்தரவு, எடப்பாடிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.. இது சசிகலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. அதனால்தான், தன் பிறந்தநாளைகூட இதை மனதில் வைத்து, சென்னையில் உள்ள பிரபல மாலில் குஷியாக கொண்டாடியதாக சொன்னார்கள்.. ஒருவேளை, இந்த முறையும் தீர்ப்பி ஓபிஎஸ் பக்கம் வந்தால், சசிகலா அதிமுக அலுவலகம் கண்டிப்பாக வருவார், அப்படி வந்தால், அவரது கை மீண்டும் ஓங்கும்.. இதனால், சசிகலா ஆதரவாளர்களும், ஓபிஎஸ் பக்கம் வருவதால், இழந்துபோன முழு பலத்தை மீண்டும் பெற்றது போல் ஆகிவிடும் என்கிறார்கள்.. தீர்ப்பு எப்படி வரப்போகிறதோ தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+