பச்சை.. மஞ்ச.. சிவப்பு.. வெள்ளை.. உள்ளாட்சி தேர்தலுக்கு 4 வண்ணத்தில் வாக்குசீட்டு.. நோ இவிஎம்!
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்.

டிசம்பர் 27ம் தேதி முதற்கட்டமாக 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6251 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும். இரண்டாவது கட்டமாக டிசம்பர் 30ம் தேதி 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6237 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 49686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுவாக கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு அதிக அளவில் வேட்பாளர்கள் நிற்க வாய்ப்புள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் பலர் நிற்க வாய்ப்புள்ளது.
ஒரு வாக்கு எந்திரத்தில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் இருக்கும். சில ஊர்களில் இதைவிட அதிகமாக வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் குழப்பத்தை தவிர்க்கும் வகையிலும், எளிதான வாக்கு பதிவிற்காகவும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
ஒரே நேரத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்தில் பயன்படுத்தப்படும்.. கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு இளம் சிவப்பு நிறத்தில் வாக்குசீட்டு பயன்படுத்தப்படும்..
ஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும் வாக்குசீட்டு பயன்படுத்தப்படும். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்கு சீட்டு பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!