கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா? தமிழக அரசு ஊழியர்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்களும் ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த முறை பள்ளிகள், அரசு அலுவலகங்களை தாண்டி, வங்கிகளுக்கும் விடுமுறை வருவதால், ஏடிஎம்களில் பணம் எடுப்போர், வங்கிகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வார் நாளைக்குள் மேற்கொள்வது நல்லது.
வரும் ஜனவரி 25-ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை நாளாகும். அதாவது நாளை மறுநாள் தமிழகத்தில் அரசு விடுமுறையாகும். தைபூசம் என்பது முருகன் கோயிலில்களில் விஷேசமான நாளாகும். பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருத்தணி உள்பட தமிழகத்தில் முருகன் கோயில்கள் அனைத்தும் திருவிழா கோலமாக இருக்கும்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் முருகனை குலதெய்வமாக வழிபடும் நிலையில், தைபூசத்திற்கு விடுமுறைவிட வேண்டும் என்று கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டது. இதை பரிசீலித்த அன்றைய அரசு தைபூசத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. இதன்படியே கடந்த சில வருடங்களாக தைபூசத்திற்கு விடுமுறைவிடப்படுகிறது. தைபூசம் அன்று பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி அரசு அலுலகங்கள், வங்கிகளும் இயங்காது. அதாவது நாளை மறுநாள் தமிழகத்தில் விடுமுறையாகும்.
இதே போல் மறுநாள் ஜனவரி 26 குடியரசு தினம் என்பதால் அன்று இந்தியா முழுவதும் கட்டாய பொது விடுமுறை தினம் ஆகும். தன் மூலம் வியாழன், வெள்ளி, சனி ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அரசு ஊழியர்களும், வங்கி ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர். வியாழன் வெள்ளி விடுமுறை என்பதுடன் சனி, ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை நாட்கள் என்பதால் பள்ளிகள் அரசு அலுவலங்கள் இயங்காது.
இதனிடையே வங்கிகளை பொறுத்தவரை வரும் சனிக்கிழமை 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை நாள் ஆகும். எனவே ஜனவரி 25 முதல் ஜனவரி 28ம் தேதி வரை நான்கு நாட்கள் தமிழகத்தில் தொடர் விடுமுறை நாட்கள் ஆகும். எனவே ஏடிஎம்களில் பணம் எடுப்போர், வங்கிகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வார் நாளைக்குள் மேற்கொள்வது நல்லது.
ஏற்கனவே பொங்கல் பண்டிகையின் போது நான்கு நாட்கள் தொடர் விடுமுறையில் இருந்த தமிழக மக்கள் அடுத்தாக இதே ஜனவரியில் 2வது முறையாக 4 நாட்கள் தொடர்விடுமுறையை கொண்டாட உள்ளனர். இன்க காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல, சுற்றுலா செல்ல திட்டமிடக்கூடும் என்பதால் சிறப்பு பேருந்துகளை அதிக அளவு இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications