மழை வெள்ளத்திற்கு 4 பேர் மரணம்...24 மணி நேரமும் தயார் நிலை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை 44 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் மழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டி வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தமிழ்நாட்டில் மழை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். தேனி, மதுரை மாவட்டங்களில் தலா 2 பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

4 killed in rain floods 24 hour readiness - KKSSR Ramachandran

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை தொடர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக விடாமல் கொட்டி வரும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் தடைபட்டுள்ளதால் மக்கள் இருளில் சிக்கி தவித்தனர்.

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், நாகை, திருவண்ணாமலை, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து 11ம் தேதி வட தமிழகம் அருகே வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, நாமக்கல், வேலூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், நாகை, கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, சேலம், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், " சென்னையில் 48 முகாம்களில் 881 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் 5106 நிவாரண முகாம்கள் தயார்நிலையில் உள்ளன. ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் நாளைக்குள் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் சராசரியாக 60 5.7 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது சென்னையில் மட்டும் 79.13 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளது. கடந்த 1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழக்கத்தை விட 44% அதிகமாக மழை பெய்து உள்ளது.

கடலூர் கரூர் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் வழக்கத்தை விட 60 சதவிகிதம் அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 889 அவர்கள் 40 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 451 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    அடுத்த 2 நாட்களுக்கு Chennai-ல் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் 10 சுரங்கப் பாதைகளில் மழைநீர் மொத்தமாக வெளியேற்றப்பட்ட விட்டது. 75 இடங்களில் மரங்கள் விழுந்திருந்தன அவை அனைத்தும் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மழைக்கு நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர் பெயரில் இழந்த நான்கு பேரில் இருவர் மதுரையையும் இருவர் தேனியை சார்ந்தவர்கள். மேலும் 16 கால்நடைகள் இறந்துள்ளன. 263 வீடுகள் சேதமடைந்துள்ளன. பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 பம்புகள் மற்றும் 3 ஆயிரத்து 915 மின்சார மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளத்தில் அடித்துச் செல்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தமிழகத்தில் மொத்தம் 87 இடங்களில் ஹெலிபேட் உள்ளது. அவை அனைத்தும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பொழியும் அளவை கணக்கிடப்பட்டு ஏரிகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது தொடர்ந்து இதே முறைதான் கடைபிடிக்கப்படும். 9ஆம் தேதிக்குள் அனைத்து மீனவர்களும் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+