செல்போனுன்னு ஒன்னு வந்த பிறகு என்னென்ன நடக்குது பாருங்க! 40 லட்சம் பேருக்கு சென்ற வாட்ஸ் அப் மெசேஜ்!
சென்னை: சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டு நிகழ்ச்சிகளை இந்தியாவிலேயே முதல் முறையாக 40 லட்சம் தமிழக மாணவ மாணவியர்கள் கைப்பேசி (Mobile Phone) இணையவழி இணைப்பின் மூலம் பார்த்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு;

சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்ச்சிகளை 40 இலட்சம் மாணவ மாணவியர்கள் கைப்பேசி (Mobile Phone) இணையவழி இணைப்பின் மூலம் கண்டனர். 38 மாவட்டங்களில் 1.60 லட்சம் மாணவ , மாணவியர்கள் தங்களது கல்லூரியிலிருந்து எல்.இ.டி. திரை மூலமாக நேரடி ஒளிபரப்பில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டினை பார்வையிட்டனர்.
சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாள் உலக முதலீட்டாளர் மாநாடு 2024-ஐ முதலமசசர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இம்மமாநாட்டில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும் நிறுவனங்கள் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்பான நிகழ்ச்சியை காண்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களில் 40 இலட்சம் மாணவ மாணவியர்கள் மாவட்டங்களில் அலைபேசி மூலம இணையவழியாக பார்வையிட சிறப்பு வசதி செய்யப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய கல்லூரிகள், பள்ளிகள், மாவட்டத் தொழில் மையங்கள், டிட்கோ வளாகம் என பல்வேறு தொழில்துறை சார்ந்த நிறுவனங்கள் மூலம் சுமார் 1.60 இலட்சம் எண்ணிக்கையிலான கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வுகளையும், தொழில் வாய்ப்புகளையும்,தொழில்நுட்பங்களையும் அறிந்திட வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இம்மாநாடு தொடர்பான வாட்ஸ் அப் சிறப்புச் செய்திகள் 45 இலட்ச நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்வுகளை காண இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் மாணவ மாணவியர்களுக்கு இந்த அரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்?












Click it and Unblock the Notifications