"ஃபுல் ஃபோர்ஸ்".. ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு போலீஸ்.. சரசரவென இறங்கிய "மூன்றாவது கண்".. வேளச்சேரி?
சென்னை: சென்னைவாசிகளுக்கு நிம்மதியும், பாதுகாப்பு உணர்வும் ஏற்படும் வகையில் தமிழக அரசு அதிரடி ஏற்பாடுகளை செய்துள்ளது. என்ன தெரியுமா?
தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாத வகையிலும், அவைகளை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர்.
கேமராக்கள்: இந்த கேமரா இருப்பதாலேயே, குற்றங்களில் அவ்வளவாக ஈடுபடாமல் நழுவி செல்லும் ஆசாமிகளும் உண்டு. குற்றங்களை விரைவாகக் கண்டறியவும், வழக்கு தொடர சிறந்த ஆதாரங்களைவும் இந்த கேமராக்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கேமரா ஆங்காங்கே உள்ளதால்தான், பெண்கள், குழந்தைகளுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கிறது..

இப்போதைக்கு சென்னையில் 62,351 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என்றாலும், மேலும் 2,730 இடங்களில் 8,189 சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்... இந்த கேமராக்களை கண்காணிக்க அந்தந்த அதிகார எல்லை ஆய்வாளர்களுக்கும் கூடுதல் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்களில் ஏதேனும் ஒன்று பழுதானால்கூட, உடனடியாக சீரமைக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
கன்ட்ரோல் மையம்: இந்த கேமராக்களை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் நடப்பாண்டில் 1.5 கோடியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இந்நிலையில், வேளச்சேரி ஸ்டேஷனுக்குட்பட்ட 55 இடங்களில், ரூபாய் 32 லட்சம் செலவில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான கன்ட்ரோல் மையமும் வேளச்சேரி காவல் நிலையத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், திருவான்மியூர் பகுதிகளில் 47 இடங்களில் ரூபாய் 24 லட்சம் செலவில் 124 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான சிசிடிவி கட்டுப்பாட்டு மையம் திருவான்மியூர் சிக்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். ஆக மொத்தம், 424 சிசிடிவி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு சக்கரங்கள்: இதைதவிர, நான்கு சக்கர, இருசக்கர ரோந்து வாகனங்கள் GPS கருவியுடன் இணைக்கப்பட்டு, இக்கட்டுப்பாட்டறையில், கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம் அவசர காலத்தில், குறிப்பிட்ட பகுதிக்கு ரோந்து வாகன உதவி தேவைப்படும் நேரத்தில் கட்டுப்பாட்டறையில் இருந்து கண்காணித்து அருகில் இருக்கும் ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இதுகுறித்து காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சொல்லும்போது, "சென்னையில் இந்த ஆண்டு 424 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதோடு மட்டுமல்லாமல், அவைகளை பராமரிப்பதற்காக தமிழக அரசு ரூபாய் 3.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. சென்னை முழுவதும் இருக்கும் 12 காவல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை பராமரிப்பதற்காக தொழில்நுட்ப உதவி ஆய்வாளரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications