சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாவாடை.. காதுல க்யூட் கம்மல்.. ஸ்டைலா ஹேன்ட் பேக்.. இப்ப ஜெயிலில்.. இது தேவையா!

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பாவாடை.. "சிலிக்கான்" பிரா.. கம்மல்.. ஹேண்ட் பேக்.. என்று டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வந்தவரை அங்கிருந்தவர்கள் வச்ச கண் வாங்காமல் பார்த்துகொண்டே நின்றனர்.. இறுதியில் போலீசார் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டனர்.

பிரேசிலில் உள்ளது நோவாமுட்டும் பரானா நகர்.. இங்கு வசித்து வருபவர் டோனா மரியா. இவருக்கு டிரைவிங் லைசென்ஸ் இல்லை.. அதனால் ஆர்வமுடன் லைசென்ஸ் எடுத்தார்.. ஆனால் ரிஜக்ட் செய்துவிட்டார்கள்.. இப்படி 3 முறையும் இவருக்கு வைத்த டெஸ்ட்டில் இவர் தேர்ச்சி ஆகவில்லை.. அதனால் வருத்தம் அடைந்து காணப்பட்டார்.

43 year old son dressed up as her mother to get driving license in brazil

அம்மாவின் முகம் வாடிப்போயிருப்பதை கண்டு மகன் ஹெய்ட்டருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. ஹெயிட்டர் வயது 43 ஆகிறது.. அம்மாவுக்கு பதிலாக இந்த முறை தாமே டிரைவிங் லைசென்ஸ் வாங்க போகலாம் என்று முடிவு செய்தார்.

அம்மாவை போலவே டிரஸ் போட்டு கொண்டார்.. இவரது அம்மா எப்போதும் நீளமான பாவாடைதான் அணிவார்.. அதுபோலவே பாவாடை, 'சிலிக்கான்' பிரா, மேலாடை,காதில் கம்மல், லிப்ஸ்டிக், ஹேண்ட் பேக்குடன் லைசென்ஸ் எடுக்க டெஸ்ட்டுக்கு போனார்.. அப்போது மரியாவை 3 முறை ரிஜக்ட் செய்த அதே அதிகாரிதான் அன்று உட்கார்ந்திருந்தார்.

குடியுரிமை சட்ட திருத்தம்.. களமிறங்கிய கமல்.. மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!குடியுரிமை சட்ட திருத்தம்.. களமிறங்கிய கமல்.. மக்கள் நீதி மய்யம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தன்னுடைய கையில் வைத்திருக்கும் அடையாள அட்டையில் இருக்கும் பெண்ணிற்கும், எதிரே வந்து நின்றிருக்கும் பெண்ணிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை பார்த்தார்.. எத்தனை முறை பார்த்தாலும் அவருக்கு திரும்ப திரும்ப சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது.. அதனால், நேரடியாக போலீசில் போய் புகார் செய்துவிட்டார்.

போலீசார் விரைந்து வந்து ஹெய்ட்டரிடம் விசாரணை நடத்தியபோதுதான், விஷயம் வெளிப்பட்டது. உடனடியாக மரியாவை வரவழைத்தனர்.. என் மேல இருக்கிற பாசத்துல மகன் தெரியாம பண்ணிட்டான் என்று மரியா சொல்லியும், ஆள்மாறாட்ட விவகாரத்தை போலீசார் மன்னிக்கவில்லை.. ஹெய்ட்டரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி.. அதன்பிறகு ஜாமீன் பெற்று வீடு வந்து சேர்ந்தார். லைசென்ஸ் வாங்க போனவர் ஜாமீன் வாங்கி வந்த இந்த சம்பவம்தான் பிரேசிலில் பரபரப்பாகி வருகிறது.

English summary
43 year old brazil son wants to take driver license test for his mother and caught by police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X