சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக ஆக்சிஜனை தெலுங்கானாவுக்குத் திருப்பி விட்ட மத்திய அரசு.. அமைச்சர் விஜய பாஸ்கர் கடும் எதிர்ப்பு

சென்னையில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு சப்ளை செய்தது தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

Recommended Video

    ஆக்சிஜன் சப்ளை…. மத்திய அரசிடம் முறையீடு…. அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

    நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனாவால் ஏற்படும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன.

    இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.. ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வேதாந்தா மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.. ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வேதாந்தா

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு ஆக்சிஜன்

    தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு ஆக்சிஜன்

    தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் நிலையில் பாதிப்பு குறைவான மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆக்சிஜனை அனுப்பியுள்ளது.

    தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி

    தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி

    கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் போதுமான படுக்கை மற்றும் ஆக்சிஜன் இன்றி தடுமாறி வருகின்றன. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் தேவைக்கு அதிகமாகவே கையிருப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    45 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

    45 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

    சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவை விட தமிழ்நாட்டில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கர்

    அமைச்சர் விஜயபாஸ்கர்

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவு தொடர்பாக மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என தெரிவித்துள்ளார். தேவைக்கு அதிகமாக இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர், அதே வேளையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    மத்திய அரசிடம் முறையீடு

    மத்திய அரசிடம் முறையீடு

    தமிழகத்தில் தற்போதைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆக்சிஜன் சப்ளை விவகாரம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

    English summary
    The incident where the central government sent 45 metric tons of oxygen produced in Tamil Nadu to states like Telangana without asking the Tamil Nadu government has come as a great shock. State Health Minister Vijayabaskar has accused the Center of not consulting with the state government on the supply of oxygen to other states.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X