Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பணியும்" எடப்பாடி?.. சிக்கலா போச்சே.. "வெள்ளை கொடிக்கு" மறுபடியும் வேலையா.. மாஸ்டர் பிளானில் திமுக

திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முக்கிய வியூகத்தை திமுக அரசு கையில் எடுக்க போகிறதாம்.. அது பற்றின செய்திதான் இணையத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

அதிமுகவில் மோதல் வெடித்த நிலையில், இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை.. அதேசமயம், ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்த்து கொள்வதில்லை என்ற முடிவையும் நேற்றைய தினமும், கறாராக தெரிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

ஒருபக்கம் ஓபிஎஸ்ஸுக்கு செக் வைத்தாலும், மறுபுறம் திமுக அரசுக்கும் சவாலை மறக்காமல் விடுத்து வருகிறார்.. நாமக்கல்லில் நடந்த பேச்சு அதைதான் எடுத்துக் காட்டுகிறது.

 B டீம்

B டீம்

"பி டீம் உருவாக்கி கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.. எத்தனை வழக்குகளை, போட்டாலும் அதனை தவிடுபொடியாக்கி, அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.. எம்பி தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் சேர்ந்து வரும்" என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையாக பேசியுள்ளார்.. இந்த பேச்சுதான், நிறைய சந்தேகங்களை களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. ஓபிஎஸ் ஆதரவாளரான மூத்த தலைவர் மருது அழகுராஜ் முன்பு ஒருமுறை பேட்டி தந்திருந்தார். அதில் சில சந்தேகங்களையும் அவர் எழுப்பியிருந்தார்..

சூத்திரதாரி

சூத்திரதாரி

"திமுகவில் தேர்தல் பிரச்சாரத்தில், முதல்வர் ஸ்டாலின் என்ன சொன்னார்? கொடநாடு கொலைக்கு சூத்திரதாரி, குற்றவாளி எடப்பாடிதான்.. எங்களிடம் அனைத்து ஆதாரமும் இருக்கிறது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 30 நாளில் அவரது முகமூடியை கிழித்து, குற்றவாளி கூண்டில் நிறுத்துவோம் என்று சொன்னார்களா இல்லையா? ஒன்றரை வருடமாகிறது.. குற்றவாளிகள் அடையாளம் காட்டிய எடப்பாடியின் இடதும், வலதுமான சேலம் இளங்கோவனை இன்றுவரை விசாரிக்கவில்லையே ஏன்? ஸ்மார்ட் சிட்டியில் 2 லட்சம் டன் நிலக்கரியை காணோம் என்று செந்தில்பாலாஜி சொன்னாரே.. இப்போ அந்த பேச்சையே காணோமே ஏன்? திமுகவுடன் மறைமுக உறவு எடப்பாடிக்கு இருப்பதாக தெரிகிறது" என்று கூறியிருந்தார்.

 +4800 ?

+4800 ?

அதேபோல மூத்த தலைவர் கேசி பழனிசாமி பேசும்போதும், "திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி மிகவும் நெருக்கமாகி வருகிறார்.. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு எடப்பாடியை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன டீல்? நெடுஞ்சாலை துறை ஊழல் 4800 கோடி ரூபாய் வழக்கில் ஏன் எடப்பாடியை திமுக அரசு கைது செய்யவில்லை? என்று சீறியிருந்தார்.. திமுகவும், ஓபிஎஸ்ஸும் மறைமுகமாக கைகோர்த்து, அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கு நேர்எதிராக வேறு மாதிரியான குற்றச்சாட்டு எடப்பாடி மீது திரும்பி உள்ளது.

 சீக்ரெட் டீலிங்

சீக்ரெட் டீலிங்

அதற்கேற்றார்போல், ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட், கொடநாடு விவகாரம், அருணா ஜெகதீசன் ஆணைய ரிப்போர்ட், என எடப்பாடி மீதான அதிருப்தி விவகாரங்கள் மாநில அரசுக்கு கையில் கிடைத்தும், அது தொடர்பாக என்ன நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது? பல மூத்த அதிமுக மாஜிக்களிடம் ரெய்டுகள் நடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பாக என்ன நடவடிக்கையை திமுக எடுத்துள்ளது? எடப்பாடியுடனான மறைமுக டீலிங் தான் காரணமா? அல்லது திமுக அரசின் மெத்தன போக்கா?, "மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என்று எடப்பாடி தொடர்ந்து சொல்லி வரும்நிலையில், இதற்கு திமுகவின் பதிலடி என்ன? என்ற விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வெடித்துள்ளன.

எக்ஸ்கள்

எக்ஸ்கள்

திமுக அரசு மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கையில்லாத நிலை உருவாகிவிடக்கூடாது.. அதனால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடுமையான நெருக்கடியை தரவேண்டும் என்று, திமுக அரசுக்கு ஐபேக் நிறுவனம் ஏற்கனவே ஐடியா ஒன்றை சொல்லியிருந்ததாம்.. அதன்படி, ரெயிடுகள் நடத்தப்பட்ட டாப் சீனியர்களை தவிர, வேறு சில "முன்னாள்களிடமும்" ரெய்டுகளை நடத்தப்பட வேண்டும் என்று யோசனை சொல்லப்பட்டிருந்த நிலையில், அதன்படியே, எந்த நேரத்திலும், முன்னாள்கள் மீது ரெய்டுகள் பாயலாம் என்கிறார்கள்.. இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துக் கொண்ட, சில மாஜிக்கள், திமுகவுக்கு வெள்ளைக்கொடியை அனுப்பி வைக்க முயன்று வருகிறார்களாம்..

 வெள்ளை கொடி

வெள்ளை கொடி

மேலும் சில அதிமுக புள்ளிகளோ, இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பித்து கொள்ள, பாஜக பக்கம் சாய முனைப்பு காட்டி வருகிறார்களாம்.. இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட்டு வருகிறது.. திமுகவுக்கு சவால் விடுத்து எடப்பாடி பேசிவரும் எடப்பாடி, ஆளும் தரப்பை முன்புபோல், எடப்பாடி பகைத்து கொள்ளாமல் ஒதுங்கியும் உள்ளாரே ஏன்? குறிப்பாக மழை வெள்ள பாதிப்பு பிரச்சனையில், பட்டும்படாமல் ஒதுங்கிவிட்டாரே ஏன்? கடந்த மழை வெள்ள பாதிப்பின்போது, நேரடியாகவே ஸ்பாட்டுக்கு சென்று, மக்களை சந்தித்து குறைகளை கேட்ட எடப்பாடி, இந்த முறை ஏன் மக்களிடம் செல்லவில்லை? என்கிற கேள்விகளை எழுப்புகிறார்கள். இதற்கு சில காரணமும் சொல்லப்படுகிறது..

 கப்சிப் மோடு

கப்சிப் மோடு

கடந்த முறை வேலுமணியின் ஸ்மார்ட் சிட்டியால்தான், தி.நகரில் மழை வெள்ள பாதிப்பு மக்களிடம் அதிருப்தியை தந்துவிட்ட நிலையில், இம்முறை மழை வெள்ள மீட்பு விவகாரத்தில் திமுக அரசு சிறப்பாகவே செயல்பட்டதை மறுக்க முடியாது.. அதனால்தான், இந்த முறை, மழை வெள்ள அரசியலில் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு குறைகளை சொன்னால், அந்த அம்பு, அதிமுக பக்கமே திரும்பிவிடும் என்பதால்தான் சைலண்ட்டாக ஒதுங்கிவிட்டார் என்றும், திமுகவை சீண்டி சவால் விடுத்து பேசிவருவதெல்லாமே அக்கட்சியின் தொண்டர்களை குஷிப்படுத்துவதற்காக மட்டுமே என்றும் சலசலக்கப்படுகிறது..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+