எல்லை தாண்டி மீன்பிடிப்பு.. சென்னை அருகே 5 இலங்கை மீனவர்கள் கைது.. இந்திய படை அதிரடி!
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 5 பேர் இந்திய கடலோர காவல்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா அருகே இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, எல்லை தாண்டி வந்து இலங்கை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற கடலோர காவல்படையினர் படகில் இருந்த 5 இலங்கை மீனவர்களை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து படகை பறிமுதல் செய்த கடலோர காவல்படையினர், மீனவர்களை சென்னை துறைமுகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கச்சத் தீவு அருகே மீன் பிடிக்கும், தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது. வலைகளை சேதப்படுத்தி, படகுகளை பறிமுதல் செய்து தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கிறது.
தங்களை பாதுகாக்க தமிழக மீனவர்கள் பல முறை மத்திய, மாநில அரசுகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இலங்கை மீனவர்களும் அடிக்கடி எல்லை தாண்டும் சம்பவங்களும் அவ்வப் போது நடந்து வருகிறது. இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாடிவருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications