5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ்
சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தின் தாக்கம் தற்போதே அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ரயில் பயணிகளின் வசதிக்காகத் தெற்கு ரயில்வே மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த ஜில் அறிவிப்பானது, பயணிகளின் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது.. ரயில்வே வெளியிட்டுள்ள அந்த சர்ப்ரைஸ் என்ன?
கோடை காலம் ஆரம்பித்துவிட்டது.. இப்போதே வெயில் சுள்ளென அடிக்க துவங்கிவிட்டது.. இன்னும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் எப்படியிருக்குமோ தெரியாது..

சென்னை டூ நெல்லை
அதனால்தான் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு, திருவாரூர், திருநெல்வேலி, திண்டுக்கல், மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழகத்தின் மிக முக்கியமான 30 ரயில் நிலையங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்..
ரயில் பயணிகளின் வருகை அதிகமாக உள்ள நிலையங்களை கண்டறிந்து, அங்கு AC மற்றும் ஏசி இல்லாத காத்திருப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் ரயில்வே நிர்வாகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது..
AC தெற்கு ரயில்வே
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, ஸ்ரீரங்கம், காரைக்குடி, ராமேஸ்வரம் மற்றும் பழனி ஆகிய முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஏற்கனவே ஏசி வசதியுடன் கூடிய காத்திருப்பு அறைகள் பயணிகளின் பயன்பாட்டில் இருந்து வருகின்றன..
இந்த வரிசையில், கரூர் ரயில் நிலையத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய காத்திருப்பு அறை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.. இந்த ரூமில் பயணிகளுக்குத் தேவையான சொகுசு இருக்கைகள், தாய்மார்களுக்கான பிரத்யேக பாலூட்டும் அறை, அதிவேக இலவச வைபை வசதி மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன..
25 ரூபாயில் காஸ்ட்லி சர்ப்ரைஸ்
இந்த ஏசி காத்திருப்பு அறையானது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. இந்த நவீன வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பயணிகளிடம் ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் என்ற குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.. இதற்கான 5 ஆண்டுகள் கால உரிமம் கோவையைச் சேர்ந்த 'சன் மோட்டார் பார்ட்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன..
இது குறித்துப் பேசிய தெற்கு ரயில்வே அதிகாரிகள், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கத் திருவாரூர், சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட 30 நிலையங்களில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், அவை முடிந்தவுடன் உடனடியாகத் திறக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்..
ஏசி வெயிட்டிங் ரூம்
ரயில் நிலையங்களில் இத்தகைய ஏசி காத்திருப்பு அறைகள் அமைக்கப்படுவது சாதாரண பயணிகளுக்குக் கூட ஒரு சொகுசு பயண அனுபவத்தை தரும்.. அதிலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் முதியவர்கள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களுக்கு இந்த வசதி மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்..
கோடை வெயிலில் நடைமேடைகளில் காத்திருப்பதைத் தவிர்த்து, குறைந்த கட்டணத்தில் இத்தகைய பாதுகாப்பான மற்றும் குளிர்ந்த சூழலில் காத்திருப்பது பயணிகளின் உடல்நலனை காக்கக்கூடியதாக உள்ளது... அதனால்தான் இந்த குளுகுளு வசதியை பயணிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்...!!!












Click it and Unblock the Notifications