தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: நிர்வாக வசதிக்காக அவ்வப்போது அரசு துறைகளில் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், காவல்துறை உயர் அதிகாரிகள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:- மாநில குற்ற ஆவண காப்பக போலீஸ் சூப்பிரண்டு ஆக இருந்த கலைச்செல்வன் சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பில் இருந்த மகேஷ்வரன், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுவரை சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக இருந்து வந்த ஆரோக்கியம் என்ற அதிகாரி, சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு-3-ன் துணை ஆணையராக மாற்றப்பட்டு இருக்கிறார். அதேபோல், இதுவரை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு 3-ன் துணை ஆணையராக இருந்து வந்த ஸ்டாலின், சென்னை மத்திய குற்றப்பிரிவு 1-ன் துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றபிரிவு 1-ன் துணை கமிஷனர் பதவி வகித்து வந்த நாக ஜோதி, மாநில குற்ற ஆவண காப்பகத்தின் போலீஸ் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் நகர துணை ஆணையர் (தெற்கு) ராஜேந்திரன், கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவை நகர போக்குவரத்து துணை ஆணையராக இருந்த மதிவாணன் சேலம் நகர துணை ஆணையராக (தெற்கு) இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications