தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 7 பேர் பலி- மொத்த பாதிப்பு 13,967 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இன்று பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 689 பேருக்கு கொரோனா உறுதியானது. வெளிநாடுகளில் கொரோனா நெகட்டிவ் என முடிவு அறிவிக்கப்பட்ட தமிழகம் திரும்பிய 7 பேருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. மாலத்தீவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்த வந்த 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

தமிழகம் திரும்பிய 79 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களில் மட்டும் 76 பேருக்கு கொரோனா உறுதியானது. கேரளா, டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 3 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதனடிப்படையில் தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா புதிய பாதிப்பு இல்லை
இன்றைய கொரோனா பாதிப்பில் 479 பேர் ஆண்கள்; 297 பேர் பெண்கள். மொத்த பாதிப்பில் 8975 பேர் ஆண்கள்; 4,989 பேர் பெண்கள்; மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். தமிழகத்தில் இன்று மொத்தம் 16 மாவட்டங்களில் புதிய பாதிப்பு எதுவும் இல்லை.

சென்னையில் மட்டும் 567
சென்னை மாவட்டத்தில் மட்டும் 567 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதர மாவட்டங்கள் பாதிப்பு விவரம்: செங்கல்பட்டு 34; திண்டுக்கல்- 1; கள்ளக்குறிச்சி -1 ; காஞ்சிபுரம்- 13; கரூர்-1 ; மதுரை- 2; ராணிப்பேட்டை- 4 ; சிவகங்கை- 1; தென்காசி 5; தஞ்சாவூர் 1; தேனி- 3; திருப்பத்தூர்- 1; திருவள்ளூர்- 42; திருவண்ணாமலை 3; தூத்துக்குடி 5; வேலூர்- 1; விழுப்புரம்- 4;

மொத்த மரணம் 94
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் மரணடைந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. பிற நாடுகள், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா உறுதியாவதுதான் தற்போதைய புதிய சவால். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications