லிஸ்ட்டில் மிஸ் ஆன 8 பேர்! எந்த தகவலும் இல்லை.. உறவினர்கள் கன்ட்ரோல் ரூமை தொடர்புகொள்ள அறிவுறுத்தல்!
சென்னை: கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 8 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று கூறி அவர்களது பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்த 8 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 296 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மீட்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு : இந்த கோர ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணி வேகமாக நடந்து வருகிறது. ஒடிசாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ, அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசா சென்று, அங்கு ஒருங்கிணைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழர்களில் 8 பேரை தொடர்புகொள்ள இயலவில்லை, அவர்கள் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை என ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு குழுவினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
யாரும் உயிரிழக்கவில்லை : கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளின் பட்டியலை வைத்து தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள விவரங்களைப் பெற்று ஒவ்வொருவராக தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி பட்டியலில் இடம்பெற்ற 127 பேரில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் அவர்களில் 8 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை விவரங்கள் சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் இந்த ரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 பேரின் பெயர்கள் : கோரமண்டல் ரயில் பயணித்த நரகாணி கோபி (34), கார்த்திக் (19), ரகுநாத் (21), மீனா (66), ஜெகதீசன் (47) கமல் (26), கல்பனா (19), அருண் (21) ஆகிய 7 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த அவர்கள் 8 பேரையும் தொடர்பு கொள்ள இயலவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
8 பேர் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். 8012805050, 044-28593990, 9445868943 ஆகிய எண்களுக்கு அவர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
"சாக்கடைக்கு சமமாக வந்து விழுகிற எடப்பாடியின் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டுவோம்”.. கொதித்த ஸ்டாலின்! -
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications