Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டன் போனதும் தந்தையை மறந்த 'பாசக்கார' மகள்! லோக்கல் ரயிலில் போளி விற்று வாழும் 80 வயது தந்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்று சும்மா ஒன்றும் சொல்லிவிடவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர், பெற்றோரை பராமரிப்பதில் காட்டும் அக்கறையின்மை மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதற்கு உதாரணம்தான் இன்று நடந்த சம்பவம்.

Dr Mouth Matters எனும் ட்விட்டர் பயனர், சென்னையின் லோக்கல் ரயிலில் போளி விற்கும் முதியவர் குறித்து எழுதியிருக்கும் பதிவு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. இனிப்பு போளியின் ஒவ்வொரு கடிக்கும் பின்னால் இருக்கும் கண்ணீர் என்கிற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

trains NRI

"கடின உழைப்புக்கு தள்ளப்பட்ட 80 வயது முதியவரை இன்று பார்த்தபோது எனது இதயம் நொறுங்கிவிட்டது. தன்னையும் தன்னுடைய மனைவியையும் பாராமரித்துக்கொள்ள, பிஸியான புறநகர் ரயிலில் இவர் இனிப்பு போளியையும், அதிரசத்தையும் விற்று வருகிறார். லண்டனில் வசிக்கும் இவரது மகள் இவரை கைவிட்டதால்தான் இந்த நிலைமை. 70வயதை கடந்த இவரது மனைவி, வீட்டில் இனிப்புகளை செய்து கொடுக்கிறார். அதை இவர் வெளியில் கொண்டு வந்து தன்மானத்துடன் விற்பனை செய்கிறார்.

நான் இவரிடம் போளியை சுவைத்தேன். அது அவ்வளவு பிரமாதமாக இருந்தது. நம்புங்கள், அது பிரஷானதாகவும், தெய்வீக மனம் கொண்டதாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருந்தது. ஒருவேளை நீங்கள் அவரை சந்தித்தால், நீங்கள் வாங்குவது வெறும் போளி மட்டுமல்ல, தளராத தைரியத்தையும், மன உறுதியையும்தான். அவருக்கு உதவ தோன்றினால், அவருடைய எண்ணை தொடர்பு கொண்டு அவரை கண்டுபிடித்து, அவருக்கு ஆர்டர் கொடுங்கள்.

சில நேரங்களில் அற்புதமான உணவுகள், சொல்லப்படாத கதைகளையும் தாங்கி வருகின்றன. நமது முதியவர்கள் தங்கள் இறுதி காலங்களில் கைவிடப்பட்டதாக உணர இனியும் நாம் அனுமதிக்க வேண்டாம்" என்று எழுதியுள்ளார்.

இந்த பதிவை ஏறத்தாழ 33 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள். 900க்கும் அதிகமானோர், கமென்ட் செய்திருக்கிறார்கள். பலரும் இந்த முதியவருக்கு உதவ விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

நாம் உழைக்கிறோம், நாள்தோறும் உழைக்கிறோம். உழைப்பில் எல்லாம் மாறுகிறது. முதியவரை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் உழைப்பில் ரயில் பயணிகளுக்கு உணவு கிடைக்கிறது. கட்டிட தொழிலாளி புதிய அடையாளங்களையும், சாலை போடுபவர்கள், புதிய பாதைகளையும், தூய்மை பணியாளர்கள் புதிய நகரத்தையும் உருவாக்குகிறார்கள். ஆனால் இறுதியில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? நம் உழைப்பில் புதிய நகரம் உருவாகிறது. நகரத்தை உருவாக்கிய நாம் எங்கே இருக்கிறோம்?

முதியவரின் வாழ்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரின் இந்த நிலைக்கு காரணம் யார்? அவரை போலவே இருக்கும் மூத்த குடிமக்களின் நிலைமைக்கு காரணம்தான் என்ன?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+