தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.... மேலும் 867 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிழந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மேலும் 352 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு விறுவிறுவென அதிகரித்து வருகிறது. 500- க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக 800-க்கும் மேல் சென்று விட்டது. சென்னையிலும் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 429 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 561 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,43,423 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 12,556 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மேலும் 352 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 64,193 பேருக்கு மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தருமபுரி, பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக தொற்று ஏதும் பதிவாகவில்லை.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications