தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு- 2 விசைபடகுகள் பறிமுதல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசை படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருப்பது மண்டபம் பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளாக கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமை பெற்றிருக்கின்றனர். ஆனால் எல்லை தாண்டி தங்களது நாட்டுக்குள் தமிழ்நாடு மீனவர்கள் நுழைவதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது, சித்ரவதை செய்வது என அட்டூழியங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேர் இதுவரை சுட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இலங்கையின் இந்த அத்துமீறல் போக்கு முடிவுக்கு கொண்டுவரப்படவே இல்லை.

 9 More Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்தார். அப்போதும் தமிழ்நாடு மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆனால் தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த 9 மீனவர்களும் சென்ற 2 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இச்சம்பவம் மண்டபம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யாமல் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+