2025 மத்திய பட்ஜெட்டுக்கு பின்.. இனி உங்கள் செலவு எவ்வளவு அதிகரிக்கும்? வருமானம் அதிகரிக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2025 மத்திய பட்ஜெட்டுக்கு பின் எதன் விலை குறையும் எதன் விலை அதிகரிக்கும் என்று இங்கே பார்க்கலாம். அதோடு வருமான வரி மாற்றங்கள் காரணமாக உங்களுடைய செலவு எப்படி மாறும் என்றும் இங்கு பார்க்கலாம்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பழைய வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி பிரிவின் கீழ் உள்ளவர்களுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதை வைத்து நீங்கள் எந்த வருமான வரி பிரிவை தேர்வு செய்வது சரியாக இருக்கும் என்று பார்க்கலாம்.

budget 2025 budget nirmala sitharaman 2025 2025

உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம்.

இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை:

அதுவே உங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. அதேபோல் வருமானமும் வருடம் 12 லட்சம் என்றால் புதிய முறையே பெஸ்ட்.

இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது. 2025 மத்திய பட்ஜெட்டுக்கு பின் எதன் விலை குறையும் எதன் விலை அதிகரிக்கும் என்று இங்கே பார்க்கலாம். அதோடு வருமான வரி மாற்றங்கள் காரணமாக உங்களுடைய செலவு எப்படி மாறும் என்றும் இங்கு பார்க்கலாம்.

விலை குறைந்த பொருட்கள்:

மருந்துகள்: புற்றுநோய் மற்றும் சில அரிதான நோய்களுக்கான மருந்துகள் உட்பட 36 உயிர்காக்கும் மருந்துகள் அடிப்படை சுங்க வரியிலிருந்து (BCD) முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அவை விலை குறைந்துள்ளன. ஆறு முக்கியமான மருந்துகளுக்கு 5% வரி மட்டுமே விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமான தாதுக்கள்: கோபால்ட் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி ஸ்கிராப் போன்ற முக்கியமான தாதுக்களின் வரியை அரசாங்கம் அகற்றியுள்ளது, இதனால் தொழிற்சாலைகள் இந்த பொருட்களை உள்நாட்டில் பெறுவது எளிதாகும். இதில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை குறையும்.

ஜவுளி இயந்திரங்கள்: ஜவுளி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரண்டு புதிய வகை தறிகள் தற்போது வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அதன் விலை குறையும். இதனால் ஆடைகள் விலை குறையும்.

எலக்ட்ரானிக்ஸ்: எல்இடி/எல்சிடி டிவிகள் மற்றும் மொபைல் போன் பேட்டரிகள் தயாரிப்பதற்கான உதிரிபாகங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது அல்லது உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள்: மொபைல் போன் பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி மீதான வரி குறைக்கப்பட்டு உள்ளது.

கடல் உணவு: கடல் உணவு ஏற்றுமதிக்கு உதவும் வகையில் உறைந்த மீன் பேஸ்ட் மற்றும் மீன் ஹைட்ரோலைசேட் (மீன் தீவனம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது) ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

தோல்: மேலும் சிறிய தோல் பதனிடுபவர்களுக்கு உதவும் வகையில் தோல் மீதான ஏற்றுமதி வரி இப்போது நீக்கப்பட்டுள்ளது.

கைவினைப் பொருட்கள்: கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வரி நீக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏற்றுமதியாளர்கள் சரக்குகளை எளிதாக அனுப்ப முடியும்.

கப்பல் கட்டுதல்: கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்புக்கான மூலப்பொருட்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

விலையுயர்ந்த பொருட்கள்:

எலக்ட்ரானிக்ஸ் (IFPD): இன்டராக்டிவ் பிளாட் பேனல் டிஸ்ப்ளேக்களில் வரி ஆனது (பெரிய திரைகளில் பயன்படுத்தப்படுகிறது) 10% லிருந்து 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெக்ஸ்டைல்ஸ் : பின்னப்பட்ட துணிகள் மீதான வரி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை உயரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+