மாஸ்க் அணியச் சொன்ன போலீஸார்.. 'சொடக்கு மேல சொடக்குபோடனும்'.. டான்ஸ் ஆடிய பெண்: வழக்கு பாயுமா?
சென்னை: "சொடக்கு மேல சொடக்கு போடனும்".. பாடலை பாடி டான்ஸ் ஆடி போலீஸ் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இளம் பெண் ஒருவர். இந்த சம்பவம் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நடந்திருக்கிறது.
Recommended Video
போலீசார் முககவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த செயலை அந்த பெண் செய்திருக்கிறார் என்பது முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
"சொடக்கு மேல சொடக்கு போடனும்".. பாடலை பாடி டான்ஸ் ஆடி பெண் செய்த அட்டகாசம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது,

போக்குவரத்து
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் அபராத நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிக்னலை மீறுபவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள், ஒன்வேயில் வருபவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள். ரேஸ் ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தில் 3 பேராக செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் இப்போது முன்பை விட அதிக அபராதம் செலுத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் அடிக்கடி தகராறும் நடக்கிறது

கொரோனா
போக்குவரத்து விதிமீறல்கள் ஒருபுறம் எனில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாகனத்தில் செல்வோர், சாலையில் செல்வோர் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. சமூக இடைவெளி, முககவசம் ஆகிய விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பிறகு தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது,

இளம் பெண்ணுக்கு அபராதம்
அதன்படிதான் சென்னை சேத்துபட்டு ரயில் நிலையப்பகுதிகளில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி முககவசம் அணியாதவர்களுக்கு இன்று அபராதம் விதித்தனர். அப்போது இளம் பெண் ஒருவருக்கு போலீசார் வழக்கம் போல் அபராதம் விதித்தனர். இதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்,

நடனம் ஆடி வெறுப்பு
ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் செய்த அந்த பெண், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யா நடனமாடும் "சொடக்கு மேல சொடக்கு போடனும்".. பாடலை பாடி, அதே பாணியில் நடனமாடி, அதிகார திமிர தூக்கி போட்டு மிதிக்க தோணுது என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவில் ஆடிய பெண் நடன கலைஞர் என்று தெரிய வந்துள்ளது,. ஆனால் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தற்போது வரை தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications