விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 54 பேர் இன்று கொரோனாவால் மரணம்
சென்னை: விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மொத்தம் 54 பேர் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 3940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மொத்தம் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 82,275 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,079 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தையும் இன்று கொரோனாவுக்கு உயிரிழந்திருக்கிறது. விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பால் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஜூன் 27-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதேபோல் திருவள்ளூரில் 17 வயது சிறுவனும் செங்கல்பட்டில் 29 வயது இளைஞரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். இவர்களைத் தவிர கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரில் முதியவர்கள் அதிக எண்ணிக்கை என்கிறது தமிழக அரசின் அறிக்கை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications