சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் பேக்கரி உரிமையாளரால் விவாதப் பொருளான விளம்பரம்- காவல்துறை நடவடிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: பேக்கரி ஒன்றுக்கான விளம்பரம் விவாதப் பொருளாகி போலீசார் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு போய்விட்டது சென்னையில்.

சென்னை தியாகராயர் நகர் மகாலட்சுமி தெருவில் Jain Bakeries & Confectioneries என்ற ஆன்லைன் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பெயர் பிரசாந்த்.

A Deabte erupts over Chennai Bakery Owners Advertisement

பிரசாந்த் தமது பேக்கரி பொருட்கள் குறித்த விளம்பரம் ஒன்றை வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டிருந்தார். அதில், Made By Jains On Orders, No Muslim Staffs என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதுதான் ஊடகங்களில் மையமான விவாதப் பொருளானது.

இது தொடர்பாக போலீசாரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனால் பிரசாந்த் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, கொரோனா தொடர்பான சூழலில் தமது வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவே தாம் அவ்வாறு விளம்பரம் செய்ததாக பிரசாந்த் ஒப்புக் கொண்டார்.'

மதுக்கடை திறப்பு.. ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நிலைப்பாடு.. மக்களை குழப்பும் அரசியல் கட்சிகள்!மதுக்கடை திறப்பு.. ஒவ்வொரு மாநிலங்களில் ஒவ்வொரு நிலைப்பாடு.. மக்களை குழப்பும் அரசியல் கட்சிகள்!

போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த பிரசாந்த் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விளம்பரங்களின் வார்த்தைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை இச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

English summary
A Deabte erupts over Chennai Bakery Owner's Advertisement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X